அமரன் படத்தை பார்த்தபிறகு மன அழுத்தத்திற்கு உள்ளானேன் – நடிகை ஸ்ரீலீலா
Actress Sreeleela talks about Amaran movie | தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீலீலா. இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் அமரன் படம் குறித்து பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சட்திரமாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருஅப்வர் நடிகை ஸ்ரீலீலா (Actress Sreeleela). இவரது நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ஸ்ரீலீலா இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியான பராசக்தி என்ற படத்தின் மூலமாக இந்த மொழியில் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தொடர்ந்து ரசிகர்களிடையே ஸ்ரீலீலாவின் கதாப்பாத்திரம் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் மொழியில் நடிகை ஸ்ரீலீலா அடுத்தடுத்தப் படங்களில் நடிப்பதற்காக தொடர்ந்து ஒப்பந்தம் ஆகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நடிகை ஸ்ரீலீலா நடிப்பில் அடுத்ததாக தமிழ் மொழியில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓ.எம் ஆப்ரேஷன் மோல். நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை ஸ்ரீலீலா அவருக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் ஸ்ரீலீலா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அமரன் படத்தை பார்த்தபிறகு மன அழுத்தத்திற்கு உள்ளானேன்:
அதன்படி அந்தப் பேட்டியில் நடிகை ஸ்ரீலீலா பேசியதாவது, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் வெளியான அமரன் படத்தைப் பார்த்த பிறகு, நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகவும் வேதனையாக இருந்தது. அந்த அனுபவம் மிகக் கனமானதாக இருந்தது. ஒரு படத்தைப் பார்த்த பிறகு, அதன் தாக்கம் நீண்ட நேரம் நம்முடன் தங்கிவிடும். இந்தப் படம் நான் எதிர்பார்த்ததை விட நீண்டதாக இருந்தது. அதே நபர்களுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அரசன் படத்திலிருந்து விலகிய அனிருத்.. இணைந்த புது இசையமைப்பாளர் யார் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Sreeleela about #Amaran
– After watching Amaran, I was traumatized, and I felt like I didn’t know what to say. I was very hurt; it was a lot. After watching a film, you get into a hangover from that movie. It was longer than I expected, and I never imagined that I would be part of a film with the same people.
#OM https://t.co/88WlQdUkIU— Movie Tamil (@_MovieTamil) November 17, 2026
Also Read… நோ பொங்கல் ரிலீஸ்… இந்தியன் 3 படம் குறித்து வெளியான அப்டேட்!