பா.ரஞ்சித்தின் அந்தப் படத்தில் எனது ரோலில் முதலில் தேர்வானது அசோக் செல்வன் தான் – கலையரசன் சொன்ன சுவாரஸ்யமான விசயம்
Actor Kalaiyarasan Recent Interview | தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கலையரசன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது நடிப்பில் வெளியான ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் முதல் தேர்வு தான் இல்லை என்றும் அதில் நடிகர் அசோக் செல்வன் தான் முதல் தேர்வு என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் நடிகர்களில் ஒருவர் நடிகர் கலையரசன் (Actor Kalaiyarasan). தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே எந்த கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் பிடிக்கும். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர் நடிகர் கலையரசன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்க்கியவர் கலையரசன். தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் அவ்வபோது படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் கொலைச்சேவல். இந்தப் படத்தில் நடிகர் கலையரசன் நாயகனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் கலையரசன் நடிப்பில் மூன்றாம் கண் என்ற படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது கதாப்பாத்திரம் ஒன்றில் நடிகர் அசோக் செல்வன் தான் நடிக்க வேண்டியது என்று தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அந்தப் படத்தில் எனது ரோலில் முதலில் தேர்வானது அசோக் செல்வன் தான்:
அதன்படி இயக்குநர் பா.ரஞ்சித் எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் வெளியான படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்தப் படத்தில் நடிகர் கலையரசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் கலையரசன் அளித்தப் பேட்டியில் கூறியதாவது, பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் கலையரசன் நடித்த கதாபாத்திரத்திற்கு, முதலில் நடிகர் அசோக் செல்வன் தான் பரிசீலிக்கப்பட்டார். ஆனால், தேதிகள் ஒத்து வராத காரணத்தால் அசோக் செல்வனால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. இறுதியில் அந்தக் கதாபாத்திரம் கலையரசனுக்குச் சென்றது என்றும் தெரிவித்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… டிக்கெட் முன்பதிவை தொடங்கியது தனுஷின் ஓம் படக்குழு – வெளியானது அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Actor #Kalaiyarasan in a Recent Interview :
Actor #AshokSelvan was the initial choice for Kalaiyarasan’s role in #PaRanjith’s Natchathiram Nagargirathu.
However, due to date clashes, Ashok Selvan couldn’t be part of the film, and the role eventually went to Kalaiyarasan😄.
Follow 👉 @FilmyBowlTamil
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) November 17, 2026
Also Read… விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருக்க இதுதான் காரணம்… அவரது மனைவி ஃபாத்திமா விளக்கம்!