Weather Update: 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் எப்படி?
Rainfall Alert: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அக்டோபர் 19, 2026: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 7 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அக்டோபர் 19ஆம் தேதியான இன்று நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 25ஆம் தேதி வரை தொடரும் கனமழை:
அக்டோபர் 20ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 21ஆம் தேதி தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க: “டம்மி முதல்வர் ஆட்சியில் மாஃபியாக்களின் ஆட்டம் அதிகரிப்பு”.. உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!!
அக்டோபர் 22ஆம் தேதி தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 23ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அக்டோபர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மேலும் படிக்க: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அதிரடி வளர்ச்சி திட்டங்கள்.. புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய்!!
வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை
அக்டோபர் 19 முதல் 23ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என்றும், வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வானிலை அறிவிப்புகளை கவனித்து, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றின்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.