AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Raghava Lawrence : பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோ இல்லையா? இயக்குநர் சொன்ன விஷயம்!

Bakkiyaraj kannan About Raghava Lawrence Role In Benz : கோலிவுட் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முன்னணி தயாரிப்பில் மிகப் பிரமாண்ட கதைக்களத்துடன் உருவாகிவரும் திரைப்படம் பென்ஸ். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி என இரு ஹீரோக்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாபாத்திரம் குறித்து இப்படத்தின் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பேசியுள்ளார்.

Raghava Lawrence : பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோ இல்லையா? இயக்குநர் சொன்ன விஷயம்!
ராகவா லாரன்ஸ் பென்ஸ் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Jun 2025 15:33 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுடன் இணைந்து மிகப் பிரம்மாண்ட மற்றும் அதிரடி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் எழுத்திலும் மற்றும் தயாரிப்பிலும் அதிரடி படமாக உருவாகி வருவதுதான் பென்ஸ் (Benz). இந்த படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (Bakkiyaraj kannan)  இயக்கி வருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் எழுத்தில் உருவாகிவரும் இந்த படமும் அவரின் “LCU” அதாவது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (Lokesh Cinematic Universe)  திரைப்பட தொகுப்பு பட்டியலில் இணையவுள்ளது. இந்த படத்தின் பூஜை கடந்த 2025, மே மாதத்தின் இறுதியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்சும் (Raghava Lawrence) இப்படத்தில் இணைந்தார். இந்த படத்தில் அவருடன் நடிகர் நிவின் பாலியும்  (Nivine Pauly) முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகர் நிவின் பாலி இணைந்த அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வந்தது. அதைத் தொடர்ந்து இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் கதாபாத்திரம் குறித்துப் பேசியுள்ளார். அதில் அவர்”ராகவா லாரன்ஸ் பென்ஸ் படத்தில் நெகட்டிவ் தோற்றம் போல உள்ள கதாபாத்திரத்தில் நடிப்பதாக” இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஓபனாக பேசியுள்ளார்.

பென்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

 

பென்ஸ் படம் குறித்து இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் பேச்சு :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பென்ஸ் பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், பென்ஸ் படத்தைப் பற்றியும், கதாபாத்திரங்கள் பற்றியும் பேசியிருந்தார். அதில் அவர் “ராகவா லாரன்ஸ் கதாபாத்திரம் குறித்தும் பேசியிருக்கிறார். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், “பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்குக் கரடு முரடான மற்றும் மிகவும் கடினமாக இருக்கும் நடிகரை நடிக்க வைக்க விரும்பினேன். பென்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸின் கதாபாத்திரம் அவருக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.

நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலியின் கதாபாத்திரத்தைத் தொடர்ந்து, மற்றொரு நட்சத்திரமும் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்து வருகிறார். இது குறித்த அகவல் விரைவில் வெளியாகும். மேலும் இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து மங்களூரு மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களில் நடைபெறும்” என்று இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் கூறியுள்ளார்.

Follow Us