AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Suriya : சூர்யாவின் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரீட்.. சூர்யா 45 படத்திலிருந்து வெளியாகும் அப்டேட்!

Suriya45 Movie New Update : இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம்தான் சூர்யா45. இந்த படத்தில் சூர்யாவுடன் நடிகை திரிஷா இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாகக் கூறப்படும் நிலையில், இப்படத்திலிருந்து அப்டேட் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suriya : சூர்யாவின் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரீட்.. சூர்யா 45 படத்திலிருந்து வெளியாகும் அப்டேட்!
சூர்யா 45Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 05 Jun 2025 22:26 PM IST

தமிழ் சினிமாவில் தனது நடிப்பினால் ரசிகர்களைக் கட்டிவைத்திருப்பவர் நடிகர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று பெரும் வெற்றி பெற்ற படம் ரெட்ரோ (Retro). இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அதிரடி ஆக்ஷ்ன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde)  நடித்திருந்தார். கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பாடல்கள் முதல் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் செதுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே நடிகர் சூர்யா ஒப்பந்தமான படம்தான் சூர்யா45. இந்த படத்தை இயக்குநர் ஆர்ஜே. பாலாஜி (RJ Balaji) இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தை டீரீம்ஸ் வாரியர் பிக்ச்சர்ஸ் (Dreams Warrior Pictures) நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025, ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியது.

மேலும் சூர்யா, தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதைத் தொடர்ந்து சூர்யா45 படத்தின் ஷூட்டிங் நிறுவனத்தாக் கூறப்படும் நிலையில், இப்படத்திலிருந்து முக்கியமான தகவல் வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியாக இருபதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அப்டேட் படத்தின் ரிலீஸ் தேதி அல்லது படத்தின் டைட்டில் டீசர் குறித்த தகவலாக இருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறிவருகிறது. என்ன அப்டேட் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சூர்யா45 படக்குழு வெளியிட்ட பதிவு :

சூர்யா45 படத்தின் கதைக்களம் :

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் நடிகர் சூர்யா, திரிஷா இருவரும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது கிராமத்துக் கதைக்களத்துடன் அமைந்த திரைப்படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் நிச்சயமாக ஆக்ஷ்ன் மற்றும் கமர்ஷியல் திரைப்படமாக அமையும் என இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை ஸ்வாசிகா கூறியிருந்தார். இப்படத்தில் சூர்யாவுடன் நடிகர்கள் திரிஷா கிருஷ்ணன், ஸ்வாசிகா, ஷிவதா, யோகிபாபு, இந்திரன்ஸ், ஆர்.ஜே. பாலாஜி, நட்டி சுப்ரமணியன், அனகா மாயா ரவி எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.

சூர்யாவின் இந்த வேட்டை கருப்பு என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இணையதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இந்த படமானது கிராமத்துக் கதைக்களத்துடன் உருவாகிவரும் நிலையில், நிச்சயமாக இந்த படத்தில் நாட்டுப்புற குத்து பாடல் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இந்த படம்தான் இவரின் இசையமைப்பில் வெளியாகவிருக்கும் முதல் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூர்யா45 படமானது வரும் 2025, ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us