AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Dhanush : தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ பட ஷூட்டிங் புகைப்படம் லீக்.. அந்த ரோலில் தனுஷ் நடிக்கிறாரா?

Tere Ishq Mein Shooting Photos Viral : தமிழ் சினிமாவை தொடர்ந்து இந்தி சினிமாவிலும் படங்களில் நடித்த வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாகத் தேரே இஷ்க் மெய்ன் என்ற பாலிவுட் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் தீயாகப் பரவி வருகிறது.

Dhanush : தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ பட ஷூட்டிங் புகைப்படம் லீக்.. அந்த ரோலில் தனுஷ் நடிக்கிறாரா?
தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Jun 2025 20:14 PM IST

தமிழ் சினிமாவை தொடர்ந்து பான் இந்திய நடிகராக தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழில் இட்லி கடை (Idly Kadai) திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L. Roy) இயக்கத்தில் உருவாகிவரும் தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishq Mein)  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025, ஜனவரி மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் அதிரடி நாயகனாக நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான ரஞ்சனா (Ranjanaa)  படத்தை இயக்கிய  இயக்குநர் ஆனந்த் எல் ராய்தான் இந்த தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பாலிவுட் பிரபல நடிகை கிருதி சனோன் (Kriti Sanon) நடித்து வருகிறார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இந்தியாவில் வட மாநிலமான வாரணாசியில் (Varanasi) நடித்து வருகிறது. தற்போது அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் லீக்காகியுள்ளது. இதில் நடிகர் தனுஷ் விமான அதிகாரி தோற்றத்தில் இருக்கிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் இப்படத்தில் விமான அதிகாரியாக நடிக்கிறார் என்று உறுதியாகியுள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் நடிகர் தனுஷின் புகைப்படங்கள் :

 

இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடித்து வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். நடிகர் தனுஷின் இந்த தேரே இஷ்க் மெய்ன் படமானது வரும் 2025, நவம்பர் 28ம் தேதியில் வெளியிடுவதற்குப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் மீள் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிலையில், நிச்சயம் பான் இந்திய ஹிட் படமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குபேரா திரைப்படம் :

நடிகர் தனுஷின் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள திரைப்படம்தான் குபேரா . இந்த படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷுடன் நடிகர்கள் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025, ஜூன் 20ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தைத் தொடர்ந்து இட்லி கடை திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் டி55, டி56, டி57, அப்துல்கலாம் பயோகிராபி, இளையராஜா பயோகிராபி மேலும் வேல்ஸ் பிலிம்ஸ் உடன் புதிய படம் எனத் தனது கைவசத்தில் பல படங்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us