Ravi Mohan : ரவி மோகன் ஸ்டூடியோஸ்.. புதிதாகத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன்!
Ravi Mohan Launches Production Hous : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரவி மோகன். இவர் திரைப்படங்களில் நடிகராக இருந்துவரும் நிலையில், மேலும் தற்போது புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பான லோகோ மற்றும் அறிவிப்பை நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) தமிழ் சினிமாவில் ஜெயம் (Jayam) என்ற படத்தின் மூலம் நடிகராக நுழைந்தார். அந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது சினிமாவில் இயக்குநர்களும் சரி , நடிகர்களும் சரி வெற்றிப் படங்களைக் கொடுத்து விட்டு, படங்களைத் தயாரிப்பதிலும் இறங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகர் ரவி மோகனும் புதிதாகத் தயாரிப்பு நிறுவனத்தைத் (Production company) தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்திற்கு நடிகர் ரவி மோகன், “ரவி மோகன் ஸ்டூடியோஸ்” (Ravi Mohan Studios) என்று பெயரை வைத்துள்ளார். தற்போது இந்த செய்தியானது ரசிகர்களை மத்தியில் வைரலாகி வருகிறது.
மேலும் நடிகர்கள் தொடர்ந்து தயாரிப்பு மற்றும் இயக்கம் என சினிமாவில் அடுத்தடுத்த கட்டத்திற்குச் செல்வதை இந்த முன்னேற்றம் கூறுகிறது. தற்போது நடிகர் ரவி மோகன், தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ மற்றும் சமூக ஊடகப் பக்கத்தை பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




நடிகர் ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
On this auspicious day, I’m thrilled to reveal the logo of #RaviMohanStudios !!!
Exciting updates coming your way soon…
Stay Tuned @Ravimohanstudio ✌🏻 pic.twitter.com/ACuBYeX9TR
— Ravi Mohan (@iam_RaviMohan) June 5, 2025
ரவி மோகனின் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் இதுவா ?
நடிப்பை தொடர்ந்து, திரைப்படத்தைத் தயாரிப்பதில் இறங்கியுள்ளார் நடிகர் ரவி மோகன். இவர் ஏற்கனவே ஒரு நேர்காணலில் தான் படங்களை இயக்கவும் ஆசைபடுவதாகக் கூறியிருந்தார். மேலும் அந்த படத்தில் நடிகர் யோகி பாபுவை வைத்துத்தான் எழுதியிருக்கிறேன், அவரை வைத்து புதிய படத்தை இயக்க விருப்பப்படுகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மேலும் நடிகர் ரவி மோகன் புதிதாகத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள நிலையில், யோகி பாபுவை வைத்து தனது சொந்த இயக்கத்திலும், தயாரிப்பிலும் முதல் படத்தை உருவாக்குவார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றனர். மேலும் இது தொடர்பான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
காரைக்குடி முருகர் கோவிலில் தோழியுடன் தரிசனம் :
நடிகர் ரவி மோகன் கடந்த 2025, ஜூன் 4ம் தேதியில், காரைக்குடியில் பிரசித்தி பெற்ற முருகர் கோவிலில் , தனது தோழி பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் சுவாமி தரிசனம் செய்திருந்தார். இவர்களின் திடீர் தரிசனம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது . மேலும் சமீப காலமாக , நடிகர் ரவி மோகன் கெனிஷாவுடன் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காரைக்குடி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தது இந்த புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதற்காகத்தான் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் ரவி மோகன் அடுத்தடுத்த 3 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படங்களிலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.