Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Simran : இந்தி சினிமாவிற்கு நோ… தமிழிலே நடிக்கக் காரணம் இதுதான் – சிம்ரன்!

Simran About Bollywood Offers : தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டு ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நாயகியாக இருந்தது வந்தவர் சிம்ரன். இவர் நடிகர்கள் அஜித் முதல் விஜய் வரை பல நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இந்தி சினிமாவிற்கு செல்ல நோ சொன்னது பற்றிப் பேசியுள்ளார்.

Simran : இந்தி சினிமாவிற்கு நோ… தமிழிலே நடிக்கக் காரணம் இதுதான் – சிம்ரன்!
சிம்ரன்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 04 Jun 2025 22:47 PM

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் சிம்ரன் (Simran). தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர். இவரின் நடிப்பில் இறுதியாக டூரிஸ்ட் பேமிலி (Tourist Family) என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பல வருடங்களுக்குப் பின் முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth)  இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை சிம்ரன் சசிகுமாருக்கு (Sasikumar) ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை சிம்ரன் இலங்கை பெண் வேடத்தில் அருமையாக நடித்திருந்தார். கடந்த 2025, மே 1ம் தேதியில் வெளியான இந்த டூரிஸ்ட் பேமிலி படம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் வரவேற்பைப் பெற்றது. பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ரனின் கம்பேக் திரைப்படமாக இந்த டூரிஸ்ட் பேமிலி படமானது அமைந்திருந்தது.

சிம்ரனின் இந்த படமானது சுமார் ரூ 8 கோடியில் உருவாகி, சுமார் ரூ. 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை பிடித்திருந்தது. இந்த படத்தின் மூலம் நடிகை சிம்ரன் மீண்டும் சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுத்துள்ளார். மேலும் இப்படத்தை தொடர்ந்து இது போன்ற கதைக்களத்துடன் கூடிய படங்களில் நடிப்பதற்குக் கதைகளைக் கேட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சமீபத்தில் நடிகை சிம்ரன் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதில் தான் எதற்கு இந்தி திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்காதது குறித்தும், தமிழ் சினிமாவை விட்டுச் செல்லாதது குறித்தும் பேசியிருக்கிறார். இது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகை சிம்ரனின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

இந்தி சினிமாவிற்கு நோ சொல்வதற்கு காரணம் பற்றி நடிகை சிம்ரனைப் பேச்சு :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சிம்ரன், இந்தி சினிமா மற்றும் தமிழ் சினிமா பற்றிப் பேசியுள்ளார். அதில் நடிகை சிம்ரனிடம் தொகுப்பாளர் இந்தி சினிமாவில் தொடர்ந்து நடிக்காததற்குக் காரணம் என்ன என்று கேட்டிருந்தார். அதற்கு நடிகை சிம்ரன், “நான் தமிழ் சினிமாவில் இருந்து, இந்தி சினிமாவிற்கு செல்லவேண்டும் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை, தமிழ் சினிமாவில் இருப்பதே எனக்கு நிம்மதியாக உள்ளது. இந்தியில் ஷோவிற்கு வாய்ப்புகள் வரும் ஆனால், எனக்கு அது சுத்தமாக செட்டாகாது என்று நடிகை சிம்ரன் விளக்கமாகப் பேசியிருந்தார்.

நடிகை சிம்ரனின் நடிப்பில் உருவாகும் புதிய படம் :

நடிகை சிம்ரன் “தி லாஸ்ட் ஒன்” என்ற படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்து வந்தார். இந்த திரைப்படத்தின் அறிவிப்பானது கடந்த 2024, செப்டம்பர் மாதத்தில் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் லோகேஷ் குமார் இயக்கிவருகிறாராம். இந்த படத்தை சிம்ரன்தான் தயாரித்தும் வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாகக் கூறப்படும் நிலையில், இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைத் தொடர்ந்து புதிய படத்தில் நடிப்பதற்குக் கதைகளைக் கேட்டுவருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.