உத்தரப்பிரதேச மாநிலம் பேரிலியில் நடைபெற இருந்த திருமணம், வரதட்சணை விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் மாறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஒன்றில், 20களில் உள்ள மணமகள், மணமகனின் குடும்பத்தினர் தன்னிடம் ரூபாய் 20 லட்சம் பணமும், ஒரு புதிய காரும் வரதட்சணையாக கோரியதாக குற்றம் சாட்டினார்.