கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பே காற்று மாசுபாடு அதன் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிடுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது நுரையீரலின் வளர்ச்சி குறைபாடு, குறைந்த பிறப்பு எடை, குறைப்பிரசவம் ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன், சிசு மரண அபாயத்தையும் அதிகரிக்கிறது. நஞ்சுக்கொடியின் வழியாக பெரிய துகள் பொருட்கள் கடந்து செல்வதால் இது நிகழ்கிறது.