2026 ஐபிஎல் வீரர் ஏலத்தில் கோடீஸ்வரர்களாக மாறக்கூடிய Uncapped வீரர்கள் யார் யார் என்பதை முன்னாள் இந்திய வீரர் ஆர் அஷ்வின் கணித்துள்ளார். குறிப்பாக, இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் ஏலத்தில் மிகப் பெரிய தொகையைப் பெற வாய்ப்பு உள்ளது என அஷ்வின் தெரிவித்துள்ளார். கார்த்திக் சர்மா மற்றும் சலில் அரோரா ஆகிய இரு வீரர்களையே அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த துஷார் ரஹேஜாவுக்கும் பெரிய தொகை கிடைக்கக்கூடும் என்றும் அஷ்வின் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணியின் வீரரான சலில் அரோரா, சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 45 பந்துகளில் 125 ரன்கள் எடுத்த அவரது அ