Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Atharvaa : தனுஷின் குபேராவுடன் மோதும் அதர்வா.. ‘டிஎன்ஏ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Atharvaa DNA Movie Release Update : தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக இருந்து வருபவர் அதர்வா முரளி. இவர் 90ஸ் நடிகர் முரளியின் மூத்த மகன் ஆவார். இவரின் நடிப்பில் தமிழில் டிஎன்ஏ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் அதர்வா பகிர்ந்துள்ளார்.

Atharvaa : தனுஷின் குபேராவுடன் மோதும் அதர்வா.. ‘டிஎன்ஏ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அதர்வாவின் டிஎன்ஏ திரைப்படம்Image Source: Social media
barath-murugan
Barath Murugan | Updated On: 05 Jun 2025 18:56 PM

நடிகர் அதர்வா (Atharvaa) தமிழில் பிரபலமான இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக நிறங்கள் மூன்று  (Nirangal Moondru) என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த திரைப்படமானது வெளியானது. இந்த படத்தில் நடிகர் அதர்வா முக்கிய நாயகனாக நடித்து அசத்தியிருந்தார். ஆனால் அவருக்கு இந்த படமானது போதுமான வரவேற்பைக் கொடுக்கவில்லை. இந்த படத்தைத் தொடர்ந்து தனது கைவசத்தில் பல படங்களைப் படங்களை வைத்துள்ளார். அதில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் டிஎன்ஏ (DNA) . இந்த டிஎன்ஏ திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் (Nelson Venkatesan) இயக்கியுள்ளார்.

இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் அதர்வா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகச் சித்தா படப் புகழ் நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து நடிகர் அதர்வா இப்படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார். இந்த படமானது வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியாக உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அதர்வா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

தனுஷின் படத்துடன் மோதும் அதர்வாவின் டிஎன்ஏ :

நடிகர் தனுஷின் நடிப்பிலும், தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்திலும் உருவாகியுள்ள திரைப்படம் குபேரா. இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் முன்னணி நாயகியாக நடித்துள்ளார். தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா என பான் இந்திய நடிகர்கள் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

தனுஷின் இந்த படமும் வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ், இந்தி மலையாளம் மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் தனுஷின் இப்படம் வெளியாகிறது. இந்த திரைப்படத்துடன்தான் நடிகர் அதர்வாவின் டிஎன்ஏ திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வாவின் டிஎன்ஏ திரைப்படம் :

நடிகர் அதர்வாவின் இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை நிமிசா சஜயன் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கருணாகரனும் நடித்துள்ளார். அதிரடி திரில்லர் திரைப்படமாக இந்த டிஎன்ஏ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படமும் நடிகர் தனுஷின் குபேரா படமும் வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் ஒரே நாளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான வீடியோ கால் பேச உதவும் வாட்ஸ்அப்பின் Low Light Mode!
தெளிவான வீடியோ கால் பேச உதவும் வாட்ஸ்அப்பின் Low Light Mode!...
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!...
நடிகர் விக்ரம் பிரபுவின் லல் மேரேஜ் படத்தின் ரிலீஸ் எப்போது?
நடிகர் விக்ரம் பிரபுவின் லல் மேரேஜ் படத்தின் ரிலீஸ் எப்போது?...
ரெப்போ வட்டி குறைப்பை தொடர்ந்து FD-களின் வட்டியை குறைத்த வங்கிகள்
ரெப்போ வட்டி குறைப்பை தொடர்ந்து FD-களின் வட்டியை குறைத்த வங்கிகள்...
வாசற்படிக்கே வந்த ஆபத்து.. மத்திய அரசை சாடிய முதல்வர் ஸ்டாலின்!
வாசற்படிக்கே வந்த ஆபத்து.. மத்திய அரசை சாடிய முதல்வர் ஸ்டாலின்!...
வெள்ளை பிரட் சாப்பிட்டால் இந்த பிரச்னை வரும்.. இதை படிங்க!
வெள்ளை பிரட் சாப்பிட்டால் இந்த பிரச்னை வரும்.. இதை படிங்க!...
காஸாவில் 5 ரூபாய் பிஸ்கெட் விலை ரூ.2,342.. 500 மடங்கு அதிகம்..
காஸாவில் 5 ரூபாய் பிஸ்கெட் விலை ரூ.2,342.. 500 மடங்கு அதிகம்.....
ஐஸ்வர்யா லட்சுமியை புகழ்ந்து தள்ளிய நடிகர் சூரி
ஐஸ்வர்யா லட்சுமியை புகழ்ந்து தள்ளிய நடிகர் சூரி...
கொரோனாவால் விழுப்புரம் இளைஞர் பலி.. சுகாதாரத்துறை விளக்கம்!
கொரோனாவால் விழுப்புரம் இளைஞர் பலி.. சுகாதாரத்துறை விளக்கம்!...
வங்கியை பூட்டாமல் சென்ற ஊழியர்கள்.. போலீசாருக்கு காத்திருந்த ஷாக்
வங்கியை பூட்டாமல் சென்ற ஊழியர்கள்.. போலீசாருக்கு காத்திருந்த ஷாக்...
டைரக்டர் கட் உடன் ஓடிடியில் வெளியானது விடுதலை பாகம் 2
டைரக்டர் கட் உடன் ஓடிடியில் வெளியானது விடுதலை பாகம் 2...