AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Thug Life : திரையரங்குகளில் வெளியானது தக் லைஃப் திரைப்படம்.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

Thug Life Movie Twitter Review | மணிரத்னம் தயாரிப்பில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் இன்று (ஜூன் 05, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வெளியாவதற்கு முன்னதாகவே பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பது குறித்து பார்க்கலாம்.

Thug Life : திரையரங்குகளில் வெளியானது தக் லைஃப் திரைப்படம்.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
தக் லைஃப்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Jun 2025 08:19 AM IST

சென்னை, ஜூன் 05 : மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் (Thug Life) திரைப்படம் இன்று (ஜூன் 05, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நாயகன் திரைப்படத்தில் கமல்ஹாசன் – மணிரத்தனம் கூட்டணி அசத்திய நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி என நட்சத்திர பட்டாளம் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ள நிலையில், அதுவும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்தது. ஏ.ஆர்.ரகுமானின் இசையில் தயாரிக்கப்பட்ட பாடல்கள் அனைத்தும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா, மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி மீண்டும் சாதித்துள்ளதா என்பது குறித்த ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

திரையரங்குகளில் வெளியானது தக் லைஃப் திரைப்படம்

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் தக் லைஃப் திரைப்படம் இன்று (ஜூன் 05, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளன. திரைப்படத்தின் கதை, ஸ்கிரீன்பிளே, இசை என அனைத்தும் சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, நடிகர் சிம்பு தக் லைஃப் திரைப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளதாகவும் ரசிகர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

முதல் பாதி சிறப்பாக உள்ளது

கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் சிம்பு

மணிரத்னத்தின் அற்புதமான படைப்பு

 

Follow Us