Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suriya : பழனி முருகன் கோவிலில் ‘சூர்யா 46’ படக்குழுவுடன் சூர்யா தரிசனம்! வைரலாகும் போட்டோ!

Suriya46 Crew Visits Palani Murugan Temple : கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந் வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் தற்போது தெலுங்கு இயக்குநருடன் உருவாகிவரும் படம் சூர்யா 46. இந்நிலையில், நடிகர் சூர்யா இன்று 2025, ஜூன் 5ம் தேதி சூர்யா46 படக்குழுவினருடன் பழனியில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Suriya : பழனி முருகன் கோவிலில் ‘சூர்யா 46’ படக்குழுவுடன் சூர்யா தரிசனம்! வைரலாகும் போட்டோ!
சூர்யா46 குழுவினர்Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 05 Jun 2025 15:59 PM

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் இறுதியாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தினை கோலிவுட் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கியிருந்தார். கடந்த 2025, மே 1ம் தேதியில் வெளியான இப்படமானது, மொத்தமாக சுமார் ரூ. 232 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை புடைத்திருந்தது. இந்த படத்தில் நடித்து முடித்ததும் இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜியின் (RJ Balaji)  இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 45வது படத்தில் இணைந்தார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், மேலும் தெலுங்கு வெங்கி அட்லூரியின்  (Venky Atluri) இயக்கத்தில் புதிய படத்தில் இணைவதாக ரெட்ரோ படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா பேசியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளும் கடந்த 2025, மே இறுதியில் நடந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இன்று 2025, ஜூன் 5ம் தேதியில் பழனியில் முருகன் கோவிலில் (Palani Murugan Temple)  , சூர்யா46 படக்குழுவுடன் இணைந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் நடிகர் சூர்யாவின் புகைப்படம் :

இந்த புகைப்படத்தில் நடிகர் சூர்யா க்ளீன் ஷேவ் செய்து இருக்கும்படி உள்ளது. ஒருவேளை சூர்யா 46 படத்திற்கு நடிகர் சூர்யா தனது லுக்கை இவ்வாறு மாற்றியுள்ளாரா என்று ரசிகர்கள் இணையத்தில் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சூர்யாவின் இந்த 46வது திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாகி வருகிறது. மேலும் இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படியாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா46  :

இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் இதுவரை வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற படங்கள் வெளியாகியிருக்கிறது. இது இறுதியாக வெளியான லக்கி பாஸ்கர் ஒட்டுமொத்தமாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்துதான் சூர்யாவுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளார்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே பாலாவின், வணங்கான் படத்தில் முதலில் ஒப்பந்தமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து மீண்டும் சூர்யா 46 படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் படக்குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.

நண்பனின் கேரக்டரை காப்பியடித்த சந்தானம்.. என்ன படம் தெரியுமா?
நண்பனின் கேரக்டரை காப்பியடித்த சந்தானம்.. என்ன படம் தெரியுமா?...
 நாளை வெளியாகிறது அட்லீ - அல்லு அர்ஜூன் படத்தின் புதிய அப்டேட்
 நாளை வெளியாகிறது அட்லீ - அல்லு அர்ஜூன் படத்தின் புதிய அப்டேட்...
ரயிலில் கிடைக்காமல் போன உதவி.. கிரிக்கெட் வீரர் மரணம்
ரயிலில் கிடைக்காமல் போன உதவி.. கிரிக்கெட் வீரர் மரணம்...
தக் லைஃப் படத்தைப் வெகுவாகப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்...
தக் லைஃப் படத்தைப் வெகுவாகப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்......
தெளிவான வீடியோ கால் பேச உதவும் வாட்ஸ்அப்பின் Low Light Mode!
தெளிவான வீடியோ கால் பேச உதவும் வாட்ஸ்அப்பின் Low Light Mode!...
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!...
நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் எப்போது?
நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் எப்போது?...
ரெப்போ வட்டி குறைப்பை தொடர்ந்து FD-களின் வட்டியை குறைத்த வங்கிகள்
ரெப்போ வட்டி குறைப்பை தொடர்ந்து FD-களின் வட்டியை குறைத்த வங்கிகள்...
வாசற்படிக்கே வந்த ஆபத்து.. மத்திய அரசை சாடிய முதல்வர் ஸ்டாலின்!
வாசற்படிக்கே வந்த ஆபத்து.. மத்திய அரசை சாடிய முதல்வர் ஸ்டாலின்!...
வெள்ளை பிரட் சாப்பிட்டால் இந்த பிரச்னை வரும்.. இதை படிங்க!
வெள்ளை பிரட் சாப்பிட்டால் இந்த பிரச்னை வரும்.. இதை படிங்க!...
காஸாவில் 5 ரூபாய் பிஸ்கெட் விலை ரூ.2,342.. 500 மடங்கு அதிகம்..
காஸாவில் 5 ரூபாய் பிஸ்கெட் விலை ரூ.2,342.. 500 மடங்கு அதிகம்.....