Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thug Life Review: மேஜிக் நிகழ்ந்ததா? .. கமல் – மணிரத்னத்தின் தக் லைஃப் விமர்சனம் இதோ!

Thug Life Review In Tamil: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வெளியாகியுள்ள "தக் லைஃப்" திரைப்படம், கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டுள்ளது என்பது ட்ரெய்லரிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது. கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் விமர்சனம் பற்றி இங்கு நாம் காணலாம்.

Thug Life Review: மேஜிக் நிகழ்ந்ததா? .. கமல் – மணிரத்னத்தின் தக் லைஃப் விமர்சனம் இதோ!
தக் லைஃப் விமர்சனம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 05 Jun 2025 14:37 PM

நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் கழித்து இயக்குனர் மணிரத்னம் (Maniratnam) – நடிகர் கமல்ஹாசன் (KamalHaasan) ஆகிய இருவரும் தக் லைஃப் (Thug Life) படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் மற்றும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரு நிறுவனங்களும் தயாரித்துள்ள இந்த படத்தில் சிலம்பரசன் டிஆர், த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து உள்ள இந்த படத்திற்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கன்னடம் மொழி தவிர்த்து தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள தக் லைப் படத்தின் விமர்சனத்தை நாம் இங்கு காணலாம். இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

படத்தின் கதை

ட்ரெய்லர் பார்க்கும் போதே படத்தின் கதை ஓரளவு ரசிகர்களுக்கு புரிந்திருக்கும். அதாவது காயல்பட்டினத்தைச் சேர்ந்த சக்திவேல் (கமல்ஹாசன்) டெல்லியில் மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக வலம் வருகிறார். அவரின் தாக்குதலில் எதிர்பாராத விதமாக அமரன் (சிலம்பரசன் டிஆர்) தந்தையான போலீஸ் அதிகாரி உயிரிழக்கிறார். இதனால் அமரன் மற்றும் தங்கை சந்திரா (ஐஸ்வர்யா லட்சுமி) பிரியும் சூழல் உண்டாகிறது.  தன்னுடைய செயலை அறிந்து வருத்தம் கொள்ளும் சக்திவேல் அமரனை தன்னுடைய சொந்த மகனாக வளர்க்கிறார். அமரன் பின்னாளில் சக்திவேலுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இது சக்திவேலின் அண்ணனாக வரும் மாணிக்கத்திற்கு (நாசர்) மற்றும் அந்த கும்பலில் இருக்கும் பட்ரோஸ் (ஜோஜு ஜார்ஜ்) ஆகியோருக்கு பிடிக்காமல் போகிறது.

இதற்கிடையில் எதிர்பாராத விதமாக சக்திவேல் சிறைக்கு செல்ல அமரன் அந்த கேங்ஸ்டர் குழுவின் பொறுப்பை ஏற்கும் சூழலுக்கு செல்கிறான். சில காலத்திற்குப் பின் சிறையிலிருந்து திரும்பும் சக்திவேல் தன்னுடைய குழுவில் நடக்கும் மாற்றங்களை கண்காணிக்கிறான். அனைவரும் அமரனை தலைவனாக கருதுவதை கண்டுகொள்கிறான். தொடர்ந்து தனது கும்பலுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது சக்திவேலின் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்குக் காரணம் அமரன் தான் என சந்தேகம் ஏற்பட இதன் பின்னர் என்ன நடந்தது என்பதே தக் லைஃப் படத்தின் மீதக்கதையாகும்.

எதிர்பார்த்த மேஜிக் நிகழ்ந்ததா?

கமல்ஹாசன்-  மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைகிறது என்ற அறிவிப்பு வெளியான போதே இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் படத்தின் காட்சிகள் ஏற்கனவே நாம் பார்த்து பழகிய கதையாக இருப்பதாக சில இடங்களில் தோன்ற வைக்கிறது. கமல் மற்றும் சிம்புவின் ஆக்ரோஷம் கலந்த அசத்தலான நடிப்பு படத்திற்கு பிளஸ்ஸாக மாறி உள்ளது. இவர்களைத் தவிர அபிராமி மற்றும் திரிஷா இருவரும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்கள்.

பொதுவாகவே சுமாரான கதையாக இருந்தாலும் மணிரத்னம் தனது கிளாசிக் திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்து விடுவார். ஆனால் அது இந்த படத்தில் மிஸ்ஸாகி இருக்கிறது என்பதே உண்மை. படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி பொறுமையை சோதிப்பதாகவே உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளது என சொல்லலாம். ஜிங்குச்சா பாடலை தவிர மற்றவை திரையில் பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கவில்லை.

அதேபோல் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு பல காட்சிகளில் பார்வையாளர்களுக்கு விருந்து படைத்துள்ளது. குறிப்பிட்ட சில கேரக்டர்களை தவிர்த்து பெரிய நடிகர் பட்டாளம் இருந்தாலும் அவர்களை ஏன் சரியாக பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள் கேள்வி எழுந்துள்ளது. 2.45 மணி நேரம் ஓடும் படம் என்பதால் ரசிகர்களுக்கு ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டி விடுகிறது. எடிட்டங்கில் அதனை சற்று குறைத்திருக்கலாம். மற்றபடி மணிரதினம், கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோர் கூட்டணியில் ஒரு கேங்ஸ்டர் படம் பார்க்க விரும்பினால் தாராளமாக தியேட்டருக்கு சென்று தக் லைஃப் படம் பார்க்கலாம்.

நடிகர் விக்ரம் பிரபுவின் லல் மேரேஜ் படத்தின் ரிலீஸ் எப்போது?
நடிகர் விக்ரம் பிரபுவின் லல் மேரேஜ் படத்தின் ரிலீஸ் எப்போது?...
ரெப்போ வட்டி குறைப்பை தொடர்ந்து FD-களின் வட்டியை குறைத்த வங்கிகள்
ரெப்போ வட்டி குறைப்பை தொடர்ந்து FD-களின் வட்டியை குறைத்த வங்கிகள்...
வாசற்படிக்கே வந்த ஆபத்து.. மத்திய அரசை சாடிய முதல்வர் ஸ்டாலின்!
வாசற்படிக்கே வந்த ஆபத்து.. மத்திய அரசை சாடிய முதல்வர் ஸ்டாலின்!...
வெள்ளை பிரட் சாப்பிட்டால் இந்த பிரச்னை வரும்.. இதை படிங்க!
வெள்ளை பிரட் சாப்பிட்டால் இந்த பிரச்னை வரும்.. இதை படிங்க!...
காஸாவில் 5 ரூபாய் பிஸ்கெட் விலை ரூ.2,342.. 500 மடங்கு அதிகம்..
காஸாவில் 5 ரூபாய் பிஸ்கெட் விலை ரூ.2,342.. 500 மடங்கு அதிகம்.....
ஐஸ்வர்யா லட்சுமியை புகழ்ந்து தள்ளிய நடிகர் சூரி
ஐஸ்வர்யா லட்சுமியை புகழ்ந்து தள்ளிய நடிகர் சூரி...
கொரோனாவால் விழுப்புரம் இளைஞர் பலி.. சுகாதாரத்துறை விளக்கம்!
கொரோனாவால் விழுப்புரம் இளைஞர் பலி.. சுகாதாரத்துறை விளக்கம்!...
வங்கியை பூட்டாமல் சென்ற ஊழியர்கள்.. போலீசாருக்கு காத்திருந்த ஷாக்
வங்கியை பூட்டாமல் சென்ற ஊழியர்கள்.. போலீசாருக்கு காத்திருந்த ஷாக்...
டைரக்டர் கட் உடன் ஓடிடியில் வெளியானது விடுதலை பாகம் 2
டைரக்டர் கட் உடன் ஓடிடியில் வெளியானது விடுதலை பாகம் 2...
தண்ணீரில் மூழ்கிய நாயை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நபர்!
தண்ணீரில் மூழ்கிய நாயை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நபர்!...
ஈமு கோழி மோசடி.. சுசி உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை!
ஈமு கோழி மோசடி.. சுசி உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை!...