Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suriya : மலையாள இயக்குநருடன் இணைகிறாரா சூர்யா? வைரலாகும் தகவல்!

Suriya New Movie Update : ரெட்ரோ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் தற்போது சூர்யா 45 மற்றும் சூர்யா 46 என இரு படங்கள் உருவாகி வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ஆவேசம் படத்தை இயக்கிய இயக்குநருடன் புதிய படத்தில் இணைவதாகத் தகவல்கள் வைரலாகி வருகிறது.

Suriya : மலையாள இயக்குநருடன் இணைகிறாரா சூர்யா? வைரலாகும் தகவல்!
நடிகர் சூர்யா Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 Jun 2025 19:30 PM

தமிழ் சினிமாவில் ரெட்ரோ (Retro) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பின் மீண்டும் ஹிட் நாயகனாக இருப்பவர் சூர்யா (Suriya) . கடந்த சில வருடங்களாக இவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியில் முடிந்தது அதற்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இவரின் நடிப்பில் ரெட்ரோ படம் கடந்த 2025, மே மாதத்தில் வெளியானது. இந்த படமானது எதிர்பார்த்ததைவிடவும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது . இப்படமானது சுமார் ரூ. 232 கோடி வசூல் செய்து வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு பிரபல இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri)  இயக்கத்தில் சூர்யா 46  (Suriya 46) படத்தில் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு முன் இயக்குநர் ஆர். ஜே. பாலாஜியின் (RJ Balaji) சூர்யா 45 படத்திலும் நடித்து வந்தார்.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், மேலும் மலையாள இயக்குநரின் படத்திலும் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள இயக்குநரின் படத்தில் சூர்யா ?

நடிகர் ஃபகத் பாசிலின் ஆவேசம் படத்தை இயக்கிய இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தைத் தமிழ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தினத்தந்தி செய்தி தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூர்யா 46 படக்குழு வெளியிட்ட பதிவு :

 

இயக்குநர் ஜித்து மாதவனின் ஹிட் படங்கள் :

இயக்குநர் ஜித்து மாதவனின் இயக்கத்தில் இறுதியாக ஆவேசம் என்ற படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் ஃபகத் பாசில் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு முன், ரோமாஞ்சம் என்ற படத்தை  இயக்கியுள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவுடன் புதிய படத்தில் கைகோர்ப்பதாக வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

சூர்யா 45- சூர்யா 46 அப்டேட் :

நடிகர் சூர்யாவின் நடிப்பில் சூர்யா 45 மற்றும் 46 படங்கள் உருவாகிவருகிறது. இதில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யா 45 படமானது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முழுவதுமாக முடிவடையுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படைத்தல் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2025, மே மாத இறுதியில் நடைபெற்றது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகப் பிரபல நடிகை மமிதா பைஜூ நடித்தது வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கிய நிலையில், வரும் 2026ம் ஆண்டு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.