Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Irandu Vaanam : விஷ்ணு விஷால் – மமிதா பைஜூவின் ‘இரண்டு வானம்’ ஷூட்டிங் ஓவரா?

Irandu Vaanam Movie Shooting Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவரின் நடிப்பில் மற்றும் மமிதா பைஜூவின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் படம் இரண்டு வானம். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு குறித்த தகவலை நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

Irandu Vaanam : விஷ்ணு விஷால் – மமிதா பைஜூவின் ‘இரண்டு வானம்’ ஷூட்டிங் ஓவரா?
இரண்டு வானம் படம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 03 Jun 2025 22:11 PM

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal ). இவரின் நடிப்பில் இறுதியாக கடந்த 2024ம் ஆண்டு லால் சலாம் (Lal Salaam) என்ற திரைப்படம் வெளியானது. நடிகர் ரஜினி (Rajinikanth)  முன்னணி நாயகனாக நடிக்க அந்த படத்தில் அவருடன் துணை நடிகராக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இந்த படத்தை ரஜினியின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். இந்த படமானது விஷ்ணு விஷாலுக்கு எதிர்பார்த்த வரவேற்பைக் கொடுக்கவில்லை. இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 படங்களில் கமிட்டானார். அதில் ஒரு படம்தான் இரண்டு வானம் (Irandu Vaanam). இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் பார்வை கடந்த 2025, மார்ச் மாதத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியிலிருந்து வருகிறது. இந்த படத்தின் தகவல்கள் எப்போது வெளியாகும் என்று பார்த்துவந்த நிலையில், தற்போது நடிகர் விஷ்ணு விஷால் புது அப்டேட்டை கொடுத்துள்ளார்.

அவர், இரண்டு வானம் படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், இன்னும் 5 நாட்களுக்குள் படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்துவிடும் என்று அப்டேட்டை கொடுத்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

இந்த இரண்டு வானம் படத்தை இயக்குநர் ராம் குமார் இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைத்து வருகிறாராம். முற்றிலும் காதல் கதை சார்ந்து இப்படமானது மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை மமிதா பைஜூ பெரிய பிரபலங்களுடன் படங்களில் இணைந்து நடித்து வருகிறார்.

நடிகை மமிதா பைஜூவின் புதிய படங்கள் :

தமிழில் நடிகை மமிதா பைஜூ , விஜய்யின் ஜன நாயகன் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஹெச். வினோத்தின் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் வெளியாகிறது. மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகிவரும் சூர்யா46 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் வரும் 2025, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இவர் தமிழில் மட்டும் சுமார் 4 படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'சூர்யா46' படக்குழுவுடன் நடிகர் சூர்யா பழனியில் சுவாமி தரிசனம்!
'சூர்யா46' படக்குழுவுடன் நடிகர் சூர்யா பழனியில் சுவாமி தரிசனம்!...
கர்நாடகா முதல்வர், துணை முதல்வர் மீது காவல் நிலையத்தில் புகார்!
கர்நாடகா முதல்வர், துணை முதல்வர் மீது காவல் நிலையத்தில் புகார்!...
திருப்பதி போல தமிழக கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு - விரைவில் அமல்
திருப்பதி போல தமிழக கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு - விரைவில் அமல்...
இயக்குநர் ராமின் பிரதிபலிப்புதான் கற்றது தமிழ் - நடிகர் ஜீவா!
இயக்குநர் ராமின் பிரதிபலிப்புதான் கற்றது தமிழ் - நடிகர் ஜீவா!...
புதிதாகத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன்!
புதிதாகத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன்!...
முன்பதிவு செய்த டிக்கெட்டின் பெயரை மாற்ற முடியுமா? எப்படி செய்வது
முன்பதிவு செய்த டிக்கெட்டின் பெயரை மாற்ற முடியுமா? எப்படி செய்வது...
மேஜிக் நிகழ்ந்ததா? .. கமல் - மணிரத்னத்தின் தக் லைஃப் விமர்சனம்!
மேஜிக் நிகழ்ந்ததா? .. கமல் - மணிரத்னத்தின் தக் லைஃப் விமர்சனம்!...
விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. விளக்கம் அளித்த வேல்முருகன்
விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. விளக்கம் அளித்த வேல்முருகன்...
நான்கு முகங்கள் கொண்ட முருகன்.. இந்த கோயில் தெரியுமா?
நான்கு முகங்கள் கொண்ட முருகன்.. இந்த கோயில் தெரியுமா?...
என் மகன் சித்தப்பா தனுஷின் மிகப்பெரிய ரசிகர்... செல்வராகவன்
என் மகன் சித்தப்பா தனுஷின் மிகப்பெரிய ரசிகர்... செல்வராகவன்...
வைகாசி விசாக நாளில் இதெல்லாம் செய்தால் புண்ணியம் கிட்டும்!
வைகாசி விசாக நாளில் இதெல்லாம் செய்தால் புண்ணியம் கிட்டும்!...