Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thug Life : ரிலீசிற்கு தயார்.. தக் லைஃப் பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Thug Life Movie Making Video : கோலிவுட் சினிமாவில் பல பிரச்சனைகளைச் சந்தித்து பின் ரிலீசிற்கு தயாராகிவரும் படம் தக் லைஃப். கமல்ஹாசனின் எழுத்தில், மணிரத்னத்தின் எழுத்தில், சிலம்பரசன் மற்றும் கமலின் நடிப்பு என மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படம் 2025, ஜூன் 5ல் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Thug Life : ரிலீசிற்கு தயார்.. தக் லைஃப் பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
தக் லைஃப் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Jun 2025 21:40 PM

கடந்த சில நாட்களாகச் சர்ச்சையிலிருந்து வந்த படம்தான் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் (Kamal Haasan)  பேசியது தொடர்பாகக் கர்நாடகா மாநிலத்தில் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாகக் கடந்த 1 வார காலமாக இப்படத்தை பற்றியும் நடிகர் கமல்ஹாசன் பற்றியும்தான் பிரச்னைகள் நடந்து வருகிறது. அனைத்து பிரச்னைகளுக்கு மத்தியிலும் கன்னட மொழியைத் தவிர மற்ற மொழிகளில் வெளியிடுவதற்கு இப்படம் மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளது. இந்த படத்தைத் தென்னிந்திய திரைப்பட இயக்குநர் மணிரத்னம்  (Mani Rantnam) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான படங்கள் பல ஹிட்டாகியிருக்கிறது. அந்த படங்களில் மத்தியில் முற்றிலும் கேங்ஸ்டர் மற்றும் மாஃபியா கதை (Mafia story) கலந்த படமாக இந்த தக் லைஃப் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்  (A. R. Rahman)இசையமைத்துள்ளார்.

இவ்வாறு மிகப் பிரம்மாண்ட கலைஞர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படமாவது 2025, ஜூன் 5ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ரிலீசிற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கும் நிலையில், ரசிகர்களுக்குச் சிறு விருந்து வைக்கும் விதத்தில் படக்குழு, இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ பதிவு :

மணிரத்னத்தின் இந்த படத்தில் முன்னணி நாயகியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இவருக்கு அடுத்தடுத்த ரோலில் நடிகைகள் அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி போன்ற நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகை திரிஷா பாடகியாக நடித்துள்ளார். மேலும் இந்த 2025ம் ஆண்டு திரிஷாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகும் 3வது படமாக தக் லைஃப் அமைந்துள்ளது. இதற்கு முன் நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் மற்றும் சிம்புவின் இந்த தக் லைஃப் படமானது 2025, ஜூன் 5ம் தேதியில் காலை 9 மணி காட்சிகள் முதல் வெளியாகி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் முதல் காட்சி காலை 9 மணி முதல் ஆரம்பமாக உள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளில் முன் தங்களில் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயமாக இந்த தக் லைஃப் படம் ரசிகர்களுக்குப் பிடித்த படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.