Karuppu: கருப்பு திரைப்பட மாபெரும் வெற்றி.. கருப்பு 2 படம் உருவாகிறதா? – வைரலாகும் தகவல்!
Karuppu Part 2 Movie Update : நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளை தெறிக்கவிட்டுவரும் திரைப்படம்தான் கருப்பு. இப்படமானது வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், இப்படத்தின் பாகம் 2 உருவாகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில், சூர்யா (Suriya) மற்றும் திரிஷா (Trisha) இணைந்து நடித்திருந்த திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் சூர்யா45 என அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்புகளும் தொடங்கியிருந்தது. இந்த படமானது சூர்யாவிற்கு பிரம்மாண்டமான எதிர்பார்ப்பை கொடுத்த படமாக அமைந்திருந்தது. இதில் நடிகர் சூர்யா கருப்பசாமியாக நடித்துள்ளார். மேலும் அவருடன் திரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். மேலும் இதில் மெயின் வில்லன் வேடத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்திருந்தார். இந்த படமானது நீதிக்கும் அநீதிக்கும் இடையேயான சண்டையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்தது.
இப்படமானது கடத்த 2026 மே 15ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியான நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் முடிவிலே கருப்பு Vs வெள்ளை என கருப்பு பார்ட் 2 படத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இது உருவாகுமா? என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: கட்டாளன் படத்திலிருந்து வெளியானது துஷாரா விஜயினின் போஸ்டர்
சூர்யாவின் கருப்பு பார்ட் 2 படமானது உருவாகுமா:
சூர்யாவின் நடிப்பில் கருப்பு படமானது திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுவருகிறது. இந்த படத்தின் முடிவில், சட்டமன்றத்தில் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சூர்யா இருக்கும்படியான காட்சிகள் இடும்பெற்றிருந்தது. அதில் அநீதி செய்யும் அரசியல்வாதி மற்றும் நல்லது நினைக்கும் அரசியல்வாதி என்பதுபோல காட்டப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ராஜ்மோகன் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது வருத்தமளிக்கிறது – விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
இதை கருப்பு Vs வெள்ளை என கருப்பு பார்ட் 2 காண லீடிங் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது கருப்பு படத்திற்காக திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பு பெற்றுவரும் நிலையில், கருப்பு 2 படமானது உருவாகுவதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறதாம். விரைவில் கருப்பு பார்ட் 2 உருவாகுமா? அல்லது இல்லையா? என படக்குழு அறிவிப்பை வெளியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
கருப்பு திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Bangalore turns to #Karuppu mode 🔥
An extraordinary response across Karnataka for The ONE @Suriya_offl‘s big blockbuster!
A @SaiAbhyankkar Musical 🎵#KaruppuBlockbuster @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr #Indrans @natty_nataraj #Swasika @SshivadaOffcl… pic.twitter.com/vD3hAgLo4W
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 17, 2026
கருப்பு திரைப்படமானது திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டுவரும் நிலையில், முதல் நாளில் உலகளவில் கிட்டத்தட்ட ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் 2வது நாளில் உலகமெங்கும் இப்படமானது கிட்டத்தட்ட ரூ 70 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை எனது குறிப்பிடத்தக்கது.