AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு படத்தை மக்கள் இவ்வளவு கொண்டாட என்ன காரணம் தெரியுமா?

why people are celebrating the movie Karuppu so much | தமிழ் சினிமாவில் கடந்த 15-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் கருப்பு. இந்தப் படத்தை ரசிகர்கள் இவ்வளவு கொண்டாட என்ன காரணம் என்று பார்ப்போம்.

கருப்பு படத்தை மக்கள் இவ்வளவு கொண்டாட என்ன காரணம் தெரியுமா?
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 May 2026 20:00 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த படம் கருப்பு. இந்தப் படம் பல தடைகளைத் தாண்டி கடந்த 15-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ள நிலையில் அவரே படத்தில் முக்கிய கதாபபத்திரத்திலும் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். அதில் குறிப்பாக படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாக படத்திற்கு ஒரு முக்கிய முடிச்சாக உள்ளது மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் இந்திரன்ஸ் கதாப்பாத்திரம் தான்.

மலையாள சினிமாவிலேயே அவரது இயல்பான நடிப்பின் காரணமாகவே அவர் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரின் சிறப்பான நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடையேயும் கருப்பு படத்தின் மூலம் சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது.

கருப்பு படத்தை மக்கள் கொண்டாட என்ன காரணம்?

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை அதிக அளவில் சாமிப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக அப்படியான சாமிப் படங்கள் வெளியாகவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு ஹைக் டெக்னாலஜியில் தற்போது உள்ள மக்களிடையே மிகவும் எளிமையாக புரியும் வகையில் ஒரு சாமிப் படம் அதுவும் தமிழக மக்களிடையே மிகவும் நெருக்கமாக உள்ள கருப்பு சாமியை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… Kamal Haasan: தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகள்.. முதல்வர் விஜயை நேரில் சந்தித்த நடிகர் கமல்ஹாசன்!

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்கும் ஃபகத் பாசில் – அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ!

Follow Us