AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படை முகாம் மீது தற்கொலை படை தாக்குதல்.. 30-க்கும் மேற்பட்டோர் பலி..

பலுசிஸ்தானில் செயல்பட்டு வரும் முக்கிய பிரிவினைவாத அமைப்புகளில் ஒன்றான BLA, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நீண்டகாலமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்புப் படையினர், அரசு அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. குவாதர் துறைமுகப் பகுதி, அண்மைக் காலமாக ஆயுதத் தாக்குதல்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக இருந்து வருகிறது.

பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படை முகாம் மீது தற்கொலை படை தாக்குதல்.. 30-க்கும் மேற்பட்டோர் பலி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Jul 2026 13:14 PM IST

ஜூலை 4, 2026: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், குவாதர் மாவட்டம் ஜிவானி அருகே உள்ள பன்வான் பகுதியில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படை முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு பலோச் விடுதலைப் படை பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்:

பலோச் விடுதலைப் படை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலை 3-ஆம் தேதி மாலை சுமார் 6.32 மணியளவில், அதன் மஜீத் பிரிகேட் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை முகாமுக்குள் செலுத்தி வெடிக்கச் செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் முகாம் கடுமையாக சேதமடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பதே ஸ்குவாட் பிரிவினர் முகாமுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் மற்றும் படுகாயமடைந்தோரின் நிலையை கருத்தில் கொண்டால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் BLA கூறியுள்ளது. தாக்குதலை நடத்தியவர் அட்டாவுல்லா பலோச் (அஜ்மல்) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ பின்னர் வெளியிடப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், BLA வெளியிட்டுள்ள தகவல்களை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும், இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் அல்லது கடலோர பாதுகாப்புப் படை இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

குவாதர் – பதற்றம் நீடிக்கும் பகுதி:

பலுசிஸ்தானில் செயல்பட்டு வரும் முக்கிய பிரிவினைவாத அமைப்புகளில் ஒன்றான BLA, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நீண்டகாலமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்புப் படையினர், அரசு அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சீனா–பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் முக்கிய மையமாக விளங்கும் குவாதர் துறைமுகப் பகுதி, அண்மைக் காலமாக ஆயுதத் தாக்குதல்கள் அதிகம் நடைபெறும் பகுதியாக இருந்து வருகிறது.

இந்தத் தாக்குதல் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், சமீப மாதங்களில் குவாதர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படும் என பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பலுசிஸ்தான் பகுதியில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை சுயாதீனமாக சரிபார்ப்பது கடினம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையில், பலுசிஸ்தான் பகுதியில் மனித உரிமை மீறல்கள் மற்றும் கட்டாய மாயமாக்கல் சம்பவங்களில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபடுவதாக மனித உரிமை அமைப்புகள் நீண்ட காலமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us