AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price Hike: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு..

Chennai Gold Rate: செப்டம்பர் 10ஆம் தேதியான இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.14,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.880 அதிகரித்து ரூ.1,14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.

Gold Price Hike: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Sep 2026 10:01 AM IST

செப்டம்பர் 10, 2026: தங்கம் விலை கடந்த சில மாதங்களாக கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினம் தங்கம் விலையில் கடுமையான சரிவு ஏற்பட்டிருந்தது. செப்டம்பர் 9ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும், ஒரு சவரன் ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:

செப்டம்பர் 10ஆம் தேதியான இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.14,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.880 அதிகரித்து ரூ.1,14,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15,524-க்கும், ஒரு சவரன் ரூ.1,24,192-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது – காரணம் என்ன?

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், கடந்த சில நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடுமையான ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை:

இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை சரிவை சந்தித்தது. இதற்கு முன்னதாக ஒரு கிராம் தங்கம் ரூ.16,000 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சரிந்து ரூ.14,000-க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: வேலை, வருமானம் குறித்து கவலையா? EPFO-ன் இந்த 5 முக்கிய நன்மைகள்

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுவதால், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான நேரமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உலக பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை, மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இருப்பினும், 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை மீண்டும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us