AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசன் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு… வைரலாகும் போட்டோஸ்

Arasan Movie Shooting Spot Photo Viral On Social Media: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் அரசன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அரசன் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு… வைரலாகும் போட்டோஸ்
அரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Mar 2026 11:40 AM IST

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டு இருந்த போதே தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan). அதனைத் தொடர்ந்து சிலம்பரசன் படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு அவரது ரசிகர்கள் பட்டாளம் இன்னும் பெரியதானது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்த சிம்பு இடையில் சில ஆண்டுகளாக பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்க முடியாமல் பல விமர்சனங்களை சந்தித்தார். சிம்பு மீது எத்தனை நெகட்டிவான விமர்சனங்கள் எழுந்தாலும் அவரது ரசிகர்களுக்கு அவர் மீது இருந்த நம்பிக்கை குறையவில்லை என்பது நிதர்சனமான உண்மை. அதன்படி தனது ரசிகர்களின் நம்பிக்கையை வீணாக்காமல் சினிமாவில் மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் சிலம்பரசன். அவரது கம்பேக் ரசிகர்களிடையே மாபெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து நடிகர் சிம்பு கம்பேக் கொடுத்த பிறகு திரையரங்குகளில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் சிம்புவின் நடிப்பில் இறுதியாக வெளியான தக் லைஃப் படத்தையும் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக நடைபெறும் அரசன் பட ஷூட்டிங்கில் சிலம்பரசன்:

அதன்படி நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அது மட்டும் இன்றி அரசன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தொடர்ந்து புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் அரசன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… ரசிகர்கள் ஷாக்.. விரைவில் விஜய் டிவியில் முடிவுக்கு வரும் சீரியல்? எந்த தொடர்-னு தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்:

Also Read… Chiranjeevi: சூர்யாதான் எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுக்கிறார் – புகழ்ந்து பேசிய சிரஞ்சீவி!

Follow Us