AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சில துளி அமிர்தத்தை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த எனக்கு பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது – இயக்குநர் எஸ்யு அருண்குமார் எமோஷ்னல் பதிவு!

Director SU Arun Kumar About Kamal Haasan Movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் எஸ்.யு. அருண் குமார். இவர் தற்போது நடிகர் கமல் ஹாசனை வைத்து படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில துளி அமிர்தத்தை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த எனக்கு பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது – இயக்குநர் எஸ்யு அருண்குமார் எமோஷ்னல் பதிவு!
சண்டியர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Nov 2026 14:14 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் (Director Arunkumar). இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் கடந்த 2014-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்கிய படம் பண்ணையாரும் பத்மினியும். இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதன்படி இயக்குநராக அறிமுகமான முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் வெளியான சேதுபதி, சித்தா, வீர தீரன் சூரன் 2 ஆகியப் படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

அதிலும் குறிப்பாக இறுதியாக இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் எழுதி இயக்கிய வீர தீரன் சூரன் 2 படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து அடுத்ததாக இந்தப் படத்தின் முதல் பாகம் தான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவர் தற்போது கமல் ஹாசன் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கமல் ஹாசனை இயக்குவது குறித்து நெகிழ்ந்து பேசிய அருண் குமார்:

இந்த நிலையில் தற்போது தனது மகிழ்ச்சியை அறிக்கை மூலம் வெளிப்படுத்தி உள்ளார் எஸ்.யு. அருண்குமார். அதில் அவர் கூறியதாவது, எனது அனைத்துப் படைப்புகளிலும் நான் அறிந்தும் அறியாமலும் ஒரு உன்னத கலைஞனின் பலவித தாக்கங்கள் இருந்துகொண்டே வந்தது. அவையனைத்தும் என்னை செழுமைப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது. சில துளி அமிர்தத்தை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த எனக்கு பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், இன்று நான் அந்த உன்னத மகா கலைஞன் திரு. கமல்ஹாசன் அவர்களுடன் கைகோர்த்து நிற்கிறேன்.
என்னை இயக்குனராகத் தேர்ந்தெடுத்து என் கதைக்கு உயிரூட்டிய எனது மானசீக ஆசானை நான் இயக்குவதோடு, இந்தப் பயணத்தில் இன்னும் நிறைய நிறைய கற்றுக்கொள்ளப் போகிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி.

இப்பெருங்கனவை நிஜமாக்க உதவிய பெருமதிப்பிற்குரிய அண்ணன் திரு.மகேந்திரன் அவர்களுக்கும், பேரன்பிற்குரிய நண்பன் திரு.டிஸ்னி அவர்களுக்கும் நன்றி சொல்வதற்குப் பதிலாக, நானும் எனது குழுவும் முழு கவனத்தையும் உழைப்பையும் கொடுத்து இந்த திரைப்படத்தை ஆகச்சிறந்த படைப்பாக சினிமா ரசிகர்களுக்கு கொடுப்போம் என்ற நம்பிக்கையை விதைக்கிறேன்.
அனைவருக்கும் நன்றி.

Also Read… அது ஒரு ஆணாதிக்கச் சூழலாக எனக்குத் தோன்றியது… தெலுங்கு படம் குறித்து வெளிப்படையாக பேசிய ராதிகா ஆப்தே – வைரலாகும் வீடியோ!

சண்டியர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸில் டாஸ்கின் போது டிடிஎஃப் வாசனை கடுப்பேற்றிய அன்சர்… வைரலாகும் வீடியோ!

Follow Us