AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருமண பரிசுகளுக்கு வருமான வரி உண்டா?.. விதிகள் கூறுவது என்ன?

Tax Exemption on Wedding Gifts in India | இந்தியாவில் திருமணங்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகின்றன. அதன் காரணமாக திருமணங்களுக்கு பரிசுகள், பணம் வழங்கப்படும். இந்த நிலையில், திருமணத்திற்கு வரும் பரிசுகள் மற்றும் பணத்துக்கு வருமான வரி விதிக்கப்படுமா என்பது தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

திருமண பரிசுகளுக்கு வருமான வரி உண்டா?.. விதிகள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Nov 2026 11:23 AM IST

இந்தியாவில் திருமண சீசன் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் திருமணம் நடைபெறுகிறது. குறிப்பாக நவம்பர் 21, 2026 முதல் டிசம்பர் 23, 2026 வரை என 25 நாட்களில் மொத்தம் 52 லட்சம் திருமணங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மிகவும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் இத்தனை திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்தியாவில் திருமணம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக உள்ளது. கடன் வாங்கியாவது திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்திவிட வேண்டும் என்பதுதான் பலரது எண்ணமாக உள்ளது.

திருமணத்திற்கு வரும் பரிசுப் பொருட்கள்

திருமணங்கள் பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில்,  திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் மணமக்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவற்றை பாசத்துடன் வழங்கும் வழக்கமும் உள்ளது. இந்த நிலையில், திருமணத்திற்கு வரும் பரிசுப் பொருட்கள், மற்றும் பணத்துக்கு வரி செலுத்த வேண்டுமா என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

இதையும் படிங்க : Expired Licenece-க்கு ரூ.10,000 வரை கட்டணம்.. அதிரடி நடவடிக்கை!

திருமணத்திற்கு வரும் மொய்க்கு வருமான வரி உண்டா?

முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனைகளை தடுக்கும் விதமாக வருமான வரித்துறை பல்வேறு சட்டங்களை வைத்துள்ளது. ஒருவர் வருமான வரித்துறையின் விதிகளை மீறி நடந்துக்கொள்ளும் பட்சத்தில் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த வகையில், வருமான வரி சட்டப் பிரிவு 56(2)(x)-ன் கீழ், திருமணத்தின்போது மணமகன் அல்லது மணமகளுக்கு கிடைக்கும் மொய் பணம், தங்க நகைகள், வீடு, நிலம் உள்ளிட்ட எந்த ஒரு பரிசுப் பொருட்களுக்கும் முழுமையான வரிஒ விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

திருமண பரிசுக்கு உச்ச வரம்பு எதுவும் கிடையாது

திருமணத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்படும் பணத்திற்கு எந்தவித உச்ச வரம்பும் கிடையாது. அதாவது, ரூ.1 லட்சமாக இருந்தாலும் சரி, ரூ.50 லட்சமாக இருந்தாலும் சரி. மணமக்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. நெருங்கிய உறவினர்கள் மட்டுமன்றி, நண்பர்கள், சக ஊழியர்கள், அக்கம் பக்கத்தினர், பழக்கமானவர்கள் என யார் வேண்டுமானாலும் பரிசு கொடுத்தாலும் அதற்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படிங்க : வங்கி லாக்கரில் இருக்கும் தங்க நகைகள் காணாமல் போனால் என்ன ஆகும்?

மணமக்களுக்கு மட்டுமே பொருந்தும்

இந்த அன்பளிப்பு மணமகன் மற்றும் மணமகள் ஆகியவர்களின் பெயர்களில் வந்தால் மட்டுமே அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும். ஆனால், மணமக்களின் பெற்றோர்களின் பெயர்களில் பரிசுப் பொருட்கள் வாங்கப்பட்டால் அதற்கு வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us