AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

2027 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அறிமுகமாகும் MDR?.. வெளியான முக்கிய தகவல்!

Indian UPI MDR Fees Postpones | யுபிஐ-ல் எம்டிஆர் கட்டணம் அறிமுகம் செய்வதது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த நிலையில் தான், எம்டிஆர் கட்டணம் அறிமுகம் செய்யப்படுவது தள்ளிப்போகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

2027 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அறிமுகமாகும் MDR?.. வெளியான முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 19 Nov 2026 13:32 PM IST

இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுவது தான் யுபிஐ (UPI – Unified Payment Interface). இந்த யுபிஐ மூலம் தான் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான், எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) கட்டணத்தை அறிமுகம் செய்யும் முயற்சியை மத்திய அரசு (Central Government Of India) கையில் எடுத்துள்ளது. எம்டிஆர் கட்டணத்தை அரசு விரைவில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியான நிலையில், இதுவரை அது குறித்த எந்த வித அதிராகரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகமல் உள்ளது. இந்த நிலையில் தான், எம்டிஆர் கட்டணம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தாமதமாகும் எம்டிஆர் கட்டணம்?

மத்திய அரசு எம்டிஆர் கட்டணத்தை 2027 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2027 ஆம ஆண்டு இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் எம்டிஆர் கட்டண முறையை அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் (Financial Express) கூறியுள்ளது. ஏற்கனவே இந்த எம்டிஆர் கட்டணத்துக்கு வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : தார் எலெக்ட்ரிக் முதல் புதிய நெக்ஸான் வரை.. இந்தியாவுக்கு வரவுள்ள 5 எலெக்ட்ரிக் SUV!

5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்

2027 ஆம் ஆண்டு உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மனிப்பூர் ஆகிய பகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தல் காரணமாக அந்த பகுதிகளில் விரைவில் தேர்தல் பணிகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில் தான், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது. காரணம், எம்டிஆர் கட்டணத்தை அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை சோதனை செய்த பின்னரும் மத்திய அரசு எம்டிஆர் கட்டண அறிமுக தேதியை அறிவிக்காமல் உள்ளதே இதற்கு காரணமாக உள்ளது.

இதையும் படிங்க : டிவிஎஸ் குழுமத்தில் தீவிரமடையும் சொத்து பிரச்னை – வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய மகள் – என்ன நடந்தது?

இந்த எம்டிஆர் கட்டண முறைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த முறையை அறிமுகம் செய்ய அரசு சிறிது கால தாமதம் செய்யலாம் தவிர, இந்த கட்டண முறை நிச்சயம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us