AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கோவையில் ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட நாரைகள் மர்ம மரணம்! பறவைக் காய்ச்சல் அச்சத்தில் பொதுமக்கள்

Coimbatore Egrets Death: கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான சக்தி சாலையில், ஆம்னி பேருந்து நிலையம் எதிரே அஸ்வினி மருத்துவமனை அருகே உள்ள மரங்களில் ஏராளமான நாரைகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், நவம்பர் 18ஆம் தேதி அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட நாரைகள் அடுத்தடுத்து உயிரிழந்து சாலையோரத்தில் விழுந்து கிடந்தன.

கோவையில் ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட நாரைகள் மர்ம மரணம்! பறவைக் காய்ச்சல் அச்சத்தில் பொதுமக்கள்
கோப்பு புகைப்படம்
Sekaran S
Sekaran S | Updated On: 19 Nov 2026 13:47 PM IST

நவம்பர் 19, 2026: கோவை சக்தி சாலையில் ஆம்னி பேருந்து நிலையம் அருகே 10-க்கும் மேற்பட்ட நாரைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பறவைகள் உயிரிழந்ததற்கான காரணம் தெரியாததால் பறவைக் காய்ச்சலா அல்லது விஷம் கலந்த உணவை உட்கொண்டதால் உயிரிழந்தனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்தடுத்து உயிரிழந்த நாரைகள்

கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான சக்தி சாலையில், ஆம்னி பேருந்து நிலையம் எதிரே அஸ்வினி மருத்துவமனை அருகே உள்ள மரங்களில் ஏராளமான நாரைகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், நவம்பர் 18ஆம் தேதி அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட நாரைகள் அடுத்தடுத்து உயிரிழந்து சாலையோரத்தில் விழுந்து கிடந்தன.

மேலும் படிக்க: நாளை திருச்சியில் ரூ. 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

ஒரே இடத்தில் இத்தனை பறவைகள் உயிரிழந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்று ஏற்பட்டதா அல்லது விஷம் கலந்த உணவு, மாசுபட்ட நீர் ஆகியவற்றை உட்கொண்டதால் உயிரிழந்தனவா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இருப்பினும், உயிரிழப்புக்கான உண்மையான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை எனப் புகார்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோவை மாநகராட்சி மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பறவைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, அவை இறந்ததற்கான காரணத்தைக் கண்டறிய உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: “ராமேஸ்வரம் அருகே வீட்டிலேயே நடந்த பிரசவம்!”.. குழந்தை உயிரிழப்பு; தந்தை மற்றும் தாத்தா கைது!!

ஆனால், தகவல் தெரிவித்தும் இதுவரை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து பறவைகளை அகற்றவோ, ஆய்வு மேற்கொள்ளவோ நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொற்றுநோய் பரவும் அபாயம்?

மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் உயிரிழந்த பறவைகள் அகற்றப்படாமல் கிடப்பதால் சுகாதாரப் பாதிப்பு ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை உரிய கால்நடை மருத்துவ மற்றும் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்புவது அவசியம். அதேபோல், உயிரிழந்த பறவைகளை பொதுமக்கள் வெறும் கைகளால் தொடாமல், அவற்றின் அருகில் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

எனவே, மாநகராட்சி, வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த பறவைகளைப் பாதுகாப்பாக அகற்றி, ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பறவைகள் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் வரை அப்பகுதியில் நிலவும் அச்சத்தைப் போக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Follow Us