AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சொத்துக்குவிப்பு வழக்கில் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை.. ஆஜராக கால அவகாசம் கேட்ட விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா!!

Vijayabaskar wife Ramya ED summons: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, இன்று ஆஜராகாமல் கால அவகாசம் கோரியுள்ளார். முன்னதாக விஜயபாஸ்கரிடம் நேற்று 9 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை.. ஆஜராக கால அவகாசம் கேட்ட விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா!!
விஜயபாஸ்கர், மனைவி ரம்யா
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Nov 2026 13:12 PM IST

சென்னை, நவ.19: சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டிருந்த போதிலும், வேறொரு நாளில் ஆஜராவதற்குக் கால அவகாசம் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, நேற்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர் விசாரணை நடத்தியிருந்த நிலையில், இந்தத் தகவல் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிக்க: மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு.. வெளிவராத பல ரகசியங்கள்.. நிஷாந்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு தாக்கல்!

ரூ.35 கோடி சொத்துக் குவிப்புப் புகார்:

தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர் பதவி வகித்தபோது, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.35 கோடி அளவிற்குச் சொத்துக்கள் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கில், விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன், இருவருக்கும் சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களிலும் ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்டன.

நேற்று விஜயபாஸ்கரிடம் நடந்த விசாரணை:

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கின் அடிப்படையில், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தைத் தனியாக விசாரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 9 மணி நேரத்திற்கும் மேலாகப் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிக்க: “ராமேஸ்வரம் அருகே வீட்டிலேயே நடந்த பிரசவம்!”.. குழந்தை உயிரிழப்பு; தந்தை மற்றும் தாத்தா கைது!!

இரண்டாவது சம்மனும் கால அவகாசமும்:

விஜயபாஸ்கரிடம் நீண்ட விசாரணை நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று அவரது மனைவி ரம்யா அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனச் சம்மன் வழங்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ஒருமுறை சம்மன் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாகச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும், இன்று அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல், வேறொரு நாளில் ஆஜராக இருப்பதாகக் கூறி கால அவகாசம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us