AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather Alert: இந்த 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கபோது – வானிலை மையம் அறிவிப்பு

Tamil Nadu weather : தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tamil Nadu Weather Alert: இந்த 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கபோது – வானிலை மையம் அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Sep 2026 15:00 PM IST

சென்னை, செப்டம்பர் 10 : தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வுமையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (நிலவுகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்க : கந்துவட்டி கொடூரம்.. போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டியதாக பேட்டி அளித்த மறுநாளே இளைஞர் வெட்டிக் கொலை.. திருவொற்றியூரில் பரபரப்பு!!

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், செப்டம்பர் 11, 2026 நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 12, 2026 நாளை மறுநாள், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ள வானிலை மையம் தென் கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.

இதையும் படிக்க : வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு.. அக்.3 முதல் 24 மணி நேரமும் திறந்திருக்கும் வேளாங்கண்ணி பேராலயம்!!

மேலும், தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 13, 2026 மற்றும் செப்டம்பர் 14. 2026 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

அதே போல் செப்டம்பர் 15, 2026 விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us