“தற்குறிகளுக்கு மிசா கைதின் வலிகள் தெரியாது” முதல்வரை கடுமையாக விமர்சித்த திமுக ஐடி விங்!
DMK IT Wing Regarding MISA : மிசா கைது நடவடிக்கையின் வலிகள் தற்குறிகளுக்கு தெரியாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி தெரிவித்துள்ளது. அத்துடன், தவெகவினரையும், முதல்வர் ஜோசப் விஜயையும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, மிசா குறித்தும், முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்தும் முதல்வர் விஜய் பேசியிருந்தார். இதற்கு, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மிசா கைது சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இன்று வியாழக்கிழமை காலை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு, தவெக ஐடி விங், பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட சிறை சென்ற தியாகி என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக் கொண்டதோ என விமர்சித்திருந்தது. இந்த நிலையில், தவெக ஐடி- விங் விமர்சனத்திற்கு திமுக ஐடி- விங் காட்டமான பதில் அளித்துள்ளது.
திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது
அதில், எச்சில் பழங்களை தேடி உண்ணும் அணில்கள் தனது கண்களை மூடி கொண்டால், உழைப்பு, தியாகத்தால் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது. ஊர் முழுவதும் பொய் பரப்பும் சாக்கடை கூட்டத்தை அம்பலப்படுத்துவதற்கு அரசியல் நாகரீகத்தோடு திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த விளக்கம் தற்குறிகளுக்கானது கிடையாது. அவர்களின் பொய் கருத்தை நம்பி தமிழக மக்கள் மீண்டும் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காகவே ஸ்டாலின் விளக்கம் அளித்து இருந்தார்.
மேலும் படிக்க: “மிசா குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ!”.. திருமாவளவன் சொன்ன பரபரப்பு கருத்து!!
தற்குறிகள் நடத்தும் தவெக கட்சி
தியாகம் மற்றும் வரலாறு என்றால் என்னவென்று தெரியாமல், சோசியல் மீடியாக்களில் அவதூறையும், பொய்யையும் பரப்பி வரும் தற்குறிகள் பொறுக்கிகள் நடத்தும் கட்சி தான் தமிழக வெற்றிக் கழகம் என்பதை மறுபடியும் தாங்கள் எடுத்த வாந்தியால் நிரூபித்துள்ளனர். மூளையும், மூஞ்சியும் இல்லாமல் தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து ஏசி கேரவனில் பவுடர் பூசி டூப் வைத்து சண்டை போட்ட இந்த தற்குறிக்கு மிசா கைதிகள் போலீசாரின் பூட்ஸ் கால்களால் மிதிபட்டு சிந்திய ரத்தத்தின் மதிப்பு தெரியாது.
தற்குறிகளுக்கு மிசா கைதின் வலிகள் தெரியாது
பத்திரிக்கையாளர்களை நேருக்கு நேர் சந்திக்க தைரியம் இல்லாமல், சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலுரைக்கு 3 நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்பு கத்தி, கதறி நடிக்கும் தற்குறிக்கு நிஜ வலிகளின் உணர்வு தெரியாது. மிசா தியாகம் என்பது சினிமாவில் நடிப்பது, பின்னாடி கையை வைத்து தடவிக் கொண்டு, பஞ்சு மெத்தையில் உருள்வது கிடையாது. கொள்கை உறுதி மாறாமல், சிறை கம்பிகளுக்கு நடுவே ரத்தம் சிந்தியது நிஜம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக உருவெடுத்தது தவெக!”.. நிலைத்தது ‘விசில்’ சின்னம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!