AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சோலார் ஆலை அமைக்க எதிர்ப்பு.. நிலம் அளவு செய்ய வந்த அதிகாரிகள் மீது பொதுமக்கள் கல்வீச்சு.. விருதுநகரில் பரபரப்பு!

Village People Attacked Officers With Stone | விருதுநகரில் சோலார் ஆலை அமைக்க நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகள் மீது சுற்று வட்டார கிராம மக்கள் இணைந்து கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோலார் ஆலை அமைக்க எதிர்ப்பு.. நிலம் அளவு செய்ய வந்த அதிகாரிகள் மீது பொதுமக்கள் கல்வீச்சு.. விருதுநகரில் பரபரப்பு!
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Jul 2026 08:42 AM IST

விருதுநகர், ஜூலை 25 : விருதுநகரில் (Virudhunagar) சோலார் ஆலைக்கு (Solar Factory) நிலம் அளவு செய்ய வந்த அதிகாரிகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் படி நிலத்தை அளவு செய்ய அதிகாரிகள் சென்ற நிலையில், பொதுமக்கள் இத்தகைய செயலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சோலார் மின் உற்பத்தி ஆலைக்கு ஒதுக்கப்பட்ட 41 ஏக்கர் நிலம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள சூரனூர் என்ற பகுதியில் தனியார் சோலார் மின் உற்பத்தி ஆலை அமைக்க சுமார் 41 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த நிலத்தை அளவு செய்து கொடுக்க நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சில அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் பணி நீக்கம் – டாஸ்மாக் பணியாளர்களுக்கு எச்சரிக்கை

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த அதிகாரிகள்

அதாவது சோலார் ஆலை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த நிலத்தை அளவீடு செய்ய தாசில்தார் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். இந்த தகவல் அறிந்து அந்த பகுதியை சுற்றியுள்ள கிராம் மக்கள் அனைவரும் அங்கு திரண்டுள்ளனர்.

இதையும் படிங்க : தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல்… பொது சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

அவர்கள் அந்த சோலார் ஆலை அமைக்க உள்ள இடம் விவசாயிகளுடையது என்றும், கண்மாய் நீர்வரத்து பாதையை தனியாருக்கு வழங்க கூடாது என்றும் கூறியுள்ளனர். இவ்வாறு அந்த சோலார் ஆலை அமைப்பதால் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி அவர்கள் அதிகாரிகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், கல் வீச்சை நிறுத்தி அதிகாரிகளை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us