AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டிஆர்பிக்காக எதை வேண்டுமானாலும் வெளியிடுவீர்களா? – ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான செய்திகளுக்கு உயர் நீதிமன்றம் தடை

Gem Veeramani Case : ஜெம் வீரமணி போக்சோ வழக்கு தொடர்பான எந்த வீடியோ, ஆடியோ, செய்தியையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும், தொலைக்காட்சிகள் தங்களின் டிஆர்பிக்காக எதை வேண்டுமானாலும் வெளியிடுமா? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

டிஆர்பிக்காக எதை வேண்டுமானாலும் வெளியிடுவீர்களா? –  ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான செய்திகளுக்கு உயர் நீதிமன்றம் தடை
வீரமணி
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Sep 2026 18:17 PM IST

சென்னை, செப்டம்பர் 25:  ஜெம் வீரமணி போக்சோ வழக்கு தொடர்பான எந்த வீடியோ, ஆடியோ, செய்தியையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு செப்டம்பர் 25, 32026 இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தொலைக்காட்சி சேனல்களை நீதிபதி கடுமையாக சாடினார். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான செய்திகளுக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி 10க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வெளியான தகவல்கள் மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வீரமணி கடந்த ஆகஸ்ட் 29, 2026 போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் தொடர்பான தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இது தொடர்பான வீடியோக்கள் செய்தி சேனல்களில் வெளியிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : என்னை தொடாதீர்கள்.. மீறி தொட்டால்… முதல்வர் விஜய் கூறிய அந்த வார்த்தை!

இதனையடுத்து ஜெம் வீரமணி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்களை செய்தி நிறுவனங்கள் வெளியிட தடை கேட்டு துளிர் அறக்கட்டளை உயர் நீதிமன்றத்தை நாடியது. இந்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 25, 2026 இன்று நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான காவல்துறையினர், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருவதாகவும், வழக்கு எஸ்ஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிகள் தொடர்பான வீடியோ வெளியானால் அது அவர்களை பாதிக்காதா? தொலைக்காட்சிகள் தங்களின் டிஆர்பிக்காக எதை வேண்டுமானாலும் வெளியிடுமா? இப்படி இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி புகார் கொடுக்க முன்வருவார்கள்? என கடுமையாக கேள்விகளை எழுப்பினார். மேலும், எஸ்ஐடி விசாரணை குறித்து அரசு தரப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி, அது அரசின் கடமை. இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஊடகங்கள் தினமும் கூட விவாதம் நடத்தலாம், அதை யாரும் தடுக்கவில்லை. மும்பை தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் பத்திரிகைகளுக்கு எப்படி கட்டுப்பாடு இருந்ததோ, அதே போல இந்த விவகாரத்திலும் செயல்பட வேண்டும். கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் வெளியிட அனுமதிக்க முடியாது என்றார்.

இதையும் படிக்க : கழுத்து நிறைய நகை.. கட்டுக்கட்டாக பணம்.. இன்ஸ்டாவில் ரீல்ஸ்.. அனைத்தும் க்ளோஸ்.. நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!

இதுவரை 28 யூடியூப் சேனல்கள் வெளியிட்ட வீடியோக்களை உடனடியாக முடக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. மக்களுக்கு தகவல் தெரிய வேண்டும் என்பதால், எஸ்ஐடி வாரம் ஒருமுறை பத்திரிகை செய்தி வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 30, 2026 அன்று ஒத்திவைக்கப்பட்டது.

Follow Us