Tamil Nadu Rains: நாளை இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather today : தமிழகத்தில் செப்டம்பர் 26, 2026 நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, செப்டம்பர் 25 : தமிழகத்தில் செப்டம்பர் 26, 2026 நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
நாளை இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் செப்டம்பர் 24, 2026 நேற்று நிலவிய தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செப்டம்பர் 25, 2026 இன்று காலை சரியாக 5.30 மணி அளவில் வலுவிழந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தெற்கு உள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் நிலவியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து செப்டம்பர் 25, 2026 இன்று காலை 8. 30 மணி அளவில் தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு உள் ஒடிசா பகுதிகளில் நிலவுகிறது.
இதையும் படிக்க : “சிங்கப்பெண் படை எங்கே?”.. வண்டலூர் பள்ளி மாணவி விவகாரத்தில் கொதித்தெழுந்த உதயநிதி ஸ்டாலின்!!




இதன் காரணமாக தமிழ்நாட்டில் செப்டம்பர் 15, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 26, 2026 நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : வண்டலூர் அரசுப் பள்ளி கழிவறையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. கொதித்தெழுந்த பெற்றோர்.. சாலையில் இறங்கி மறியல்!!
சென்னை வானிலை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை செப்டம்பர் 26, 2026 நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.