AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

‘ என்னை தோற்கடிக்க திமுக அதிமுக இணைந்து சதி செய்கிறது’ – தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் குற்றச்சாட்டு..

Madurantakam By Election: மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தன்னை தோற்கடிப்பதற்காக திமுக மற்றும் அதிமுக இணைந்து சதி செய்வதாக அவர் குற்றம்சாட்டினார்.

‘ என்னை தோற்கடிக்க திமுக அதிமுக இணைந்து சதி செய்கிறது’ – தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் குற்றச்சாட்டு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Sep 2026 10:47 AM IST

செப்டம்பர் 25, 2026: மதுராந்தகம் இடைத்தேர்தலில் தன்னை தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் இணைந்து சதி செய்வதாக தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் தெரிவித்துள்ளார். அதேபோல், வாக்குக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இரு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

அதிமுக – திமுக சதி: மரகதம் குமரவேல் குற்றச்சாட்டு:

இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தன்னை தோற்கடிப்பதற்காக திமுக மற்றும் அதிமுக இணைந்து சதி செய்வதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப்படி 234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வாக்குகளைப் பெறுவதே நோக்கம் என்றும், அதன்படி மதுராந்தகம் தொகுதியிலும் வாக்குக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மரகதம் குமரவேல் தெரிவித்தார். மக்களின் ஆதரவு தங்கள் கட்சிக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க: 40 ஏக்கர் மைதானம்.. 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி.. மதுராந்தகத்தில் முதல்வர் விஜய்யின் பிரம்மாண்ட பிரச்சாரம்!!

மரகதம் குமரவேல் கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது ராஜினாமையால் மதுராந்தகம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதே தொகுதியில் தவெக சார்பில் மீண்டும் அவர் போட்டியிடுகிறார்.

சூறாவளி பிரச்சாரத்தில் வேட்பாளர்கள்:

இதனிடையே, இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் வாக்குகளைப் பிரிப்பதற்காக இந்தத் தேர்தலில் களம் இறங்கவில்லை என்றும், மக்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்றும் அக்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளர் பரந்தாமன், அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. சாந்தி, மகேந்திர சிம்மனிடம் விடிய விடிய போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை!

இந்த நிலையில், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய் மதுராந்தகம் தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அவரது பிரச்சாரத்தையொட்டி காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரு தொகுதிகளிலும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Follow Us