சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலை எப்படி இருக்கும்?
சென்னையைப் பொறுத்தவரையில், வானம் பகல் நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 25, 2026: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சாவூரில் 37 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலையின் தாக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36.5 டிகிரி செல்சியஸ், நுங்கம்பாக்கத்தில் 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய சில தினங்களுக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
செப்டம்பர் 25-ஆம் தேதியான இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: நிர்வாண கோலத்தில் ஜெம் வீரமணி? சிறுமியுடன் உல்லாசமாக இருந்த ரகசிய காட்சிகள் கசிவு.. வழக்கில் அடுத்தக்கட்ட பரபரப்பு!
26-ஆம் தேதியான நாளை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டிய அளவில் இருக்கும் என்றும், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சில இடங்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கரூர் சம்பவ வழக்கில் தீர்ப்பு வந்தால் “தவெக க்ளோஸ்”.. பிரசாரத்தில் இறங்கி அடித்த எடப்பாடி கே. பழனிசாமி!
சென்னையைப் பொறுத்தவரையில், வானம் பகல் நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.