Ken Karunaas: ஒரு படம் நல்ல இல்லனா அவங்க பரம்பரையையே திட்டுறாங்க.. கென் கருணாஸ் சொன்ன விஷயம்!
Ken Karunaas About Audiences Satisfaction: தமிழில் தற்போது இளம் கதாநாயகனாக மற்றும் இயக்குநராக அறிமுகமாகியுள்ளவர் கென் கருணாஸ். இவரின் யூத் படமானது வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் படம் பார்க்கும் ரசிகர்களின் திருப்தி குறித்து பேசியுள்ளர்.
கோலிவுட் சினிமாவில் வரும் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் யூத் (Youth). இப்படத்தை கருணாஸ் (karunas) மற்றும் கிரேஷின் மகன், கென் கருணாஸ் (Ken Karunaas) இயக்கியுள்ளார். இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்த நிலையில், முக்கிய வேடங்களிலும் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் தனுஷின் (Dhanush) இயக்கத்திலும், அவரின் நடிப்பில் சமீப ஆண்டுகளாக வெளியான படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் இவர் தற்போது யூத் என்ற படத்தை இயக்கி அதில், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்தை பர்வதா என்டேர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துள்ளார்.
இந்த படமானது ஒரு பள்ளி மாணவன் தனது சிறுவயதிலே காதலில் விழுந்த நிலையில், அவர் எவ்வாறு பாதிக்கிறது என்பதை மையமாக கொண்ட கதையில் தயாராகியுள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கிய நிலையில், ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கென் கருணாஸ், ரசிகர்களை படத்தின் மூலம் திருப்தி படுத்துவது பற்றி தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: உறியடி புகழ் விஜயகுமாரின் புதுப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா
ரசிகர்களின் ரசனை மற்றும் அவர்களின் திருப்தி குறித்து கென் கருணாஸ் சொன்ன விஷயம்:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கென் கருணாஸ் அதில், “இப்போது சாதாரணமாக ஒரு படத்திற்கும் ரூ 200 செலவு செய்கிறோம். அதுபோல ஒரு பிரியாணி வாங்கவும் ரூ 200 செலவு செய்கிறோம். பிரியாணியும் நல்ல இல்லை, பார்த்த படமும் நல்ல இல்லை. பிரியாணி நல்ல இல்லையென்றால், நல்ல இல்லை வேற கடையில் இனி சாப்பிடலாம் என சொல்லிடலாம். ஆனால் ஒரு படம் நல்ல இல்லை என்றால், அவர்களின் பரம்பரையையே திட்டிடுறாங்க.
இதையும் படிங்க: இந்த சினிமா நிலையில்லாத ஒன்னு என்பதை நான் புரிந்துகொண்டேன் – நடிகை பிரியங்கா மோகன்
ஏன் இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கும்போது, ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 2 :30 மணிநேரத்துக்கும் மேல் உள்ளே இருக்கிறோம். அந்த படம் நல்ல இல்லை என்றால் வெளியே வந்து ஆதங்கத்தை சொல்லித்தானே ஆகவேண்டும் என பலரும் கூறுகிறார்கள். அந்த விதத்தில் நான் எனது சிறப்பை செய்திருக்கிறேன். படத்தை பார்ப்பவர்களை பொழுதுபோக்காக எனது படம் இருக்கும் என நினைக்கிறேன்” என அதில் வர தெரிவித்திருந்தார்.
கென் கருணாஸ் வெளியிட்ட யூத் பட ட்ரெய்லர் குறித்த பதிவு:
From being your biggest fan to getting my first film trailer released by you is a dream come true moment ⭐️
Thank you so much for being so kind anna 🤗 https://t.co/EpQQEkx7nr
— Ken Karunaas (@KenKarunaas) March 7, 2026
இந்த யூத் பட ட்ரெய்லரானது சமீபத்தில் வெளியான நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதில் தளபதி விஜய், தனுஷ் மற்றும் சிலம்பரசன் போன்ற நடிகர்களின் Reference பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்படமானது வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.