Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

October Spiritual Events: தீபாவளி, கந்த சஷ்டி.. அக்டோபர் மாதத்தின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்!

2025 அக்டோபர் மாதம் பண்டிகைகள் நிறைந்த புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களை உள்ளடக்கியது. தீபாவளி, சரஸ்வதி பூஜை, கந்த சஷ்டி, புரட்டாசி சனிக்கிழமை, வள்ளலார் பிறந்தநாள், சுபமுகூர்த்த தினம், சனிப் பிரதோஷம் என பல ஆன்மிக நிகழ்வுகள் வருகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

October Spiritual Events: தீபாவளி, கந்த சஷ்டி.. அக்டோபர் மாதத்தின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள்!
அக்டோபர் மாத ஆன்மிக நிகழ்வுகள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 30 Sep 2025 09:30 AM IST

2025 ஆம் ஆண்டின் 10வது மாதமான அக்டோபரில் அடியெடித்து வைக்கிறோம். இந்தியாவில் பண்டிகை காலமாக அறியப்படும் மாதங்களில் அக்டோபரும் ஒன்றாகும். புரட்டாசி – ஐப்பசி என இரு தமிழ் மாதங்கள் இணைந்து வரும் 2025 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜய தசமி, புரட்டாசி சனிக்கிழமை, தீபாவளி, கந்த சஷ்டி என பல முக்கிய நிகழ்வுகள் வருகிறது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

புரட்டாசி மாதத்தின் முக்கிய நிகழ்வுகள்

  • அக்டோபர் 1 – புரட்டாசி 15 – புதன்கிழமை – சரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை/ வளர்பிறை நவமி
  • அக்டோபர் 2 – புரட்டாசி 16 – வியாழக்கிழமை – விஜய தசமி / கரிநாள்/ திருவோண விரதம்/ வளர்பிறை தசமி / காந்தி ஜெயந்தி
  • அக்டோபர் 3 – புரட்டாசி 17 – வெள்ளிக்கிழமை – வளர்பிறை சர்வ ஏகாதசி
  • அக்டோபர் 4 – புரட்டாசி 18 – சனிக்கிழமை – வளர்பிறை பிரதோஷம் / புரட்டாசி சனிக்கிழமை
  • அக்டோபர் 5 – புரட்டாசி 19 – ஞாயிற்றுக்கிழமை – வள்ளலார் பிறந்தநாள்
  • அக்டோபர் 6 – புரட்டாசி 20 – திங்கட்கிழமை – முழு நிலவு நாள்
  • அக்டோபர் 8 – புரட்டாசி 22 – புதன்கிழமை – தேய்பிறை பிரதமை
  • அக்டோபர் 10 – புரட்டாசி 24 – வெள்ளிக்கிழமை – சங்கடஹர சதுர்த்தி / கார்த்திகை விரதம்
  • அக்டோபர் 11 – புரட்டாசி 25 – சனிக்கிழமை – தேய்பிறை பஞ்சமி / புரட்டாசி சனிக்கிழமை
  • அக்டோபர் 12 – புரட்டாசி 26 – ஞாயிற்றுக்கிழமை – தேய்பிறை ஷஷ்டி விரதம்
  • அக்டோபர் 13 – புரட்டாசி 27 – திங்கட்கிழமை – தேய்பிறை ஸ்பதமி
  • அக்டோபர் 14 – புரட்டாசி 28 – செவ்வாய்கிழமை – தேய்பிறை அஷ்டமி
  • அக்டோபர் 15 – புரட்டாசி 29 – புதன்கிழமை – தேய்பிறை நவமி / கரிநாள்/ அப்துல்கலாம் பிறந்த நாள்
  • அக்டோபர் 16 – புரட்டாசி 30 – வியாழக்கிழமை – தேய்பிறை தசமி 
  • அக்டோபர் 17 – புரட்டாசி 31 – வெள்ளிக்கிழமை – தேய்பிறை சர்வ ஏகாதசி

ஐப்பசி மாத முக்கிய நிகழ்வுகள் 

  • அக்டோபர் 18 – ஐப்பசி 1 – சனிக்கிழமை –  சனிப்பிரதோஷம் / ஐப்பசி மாத பிறப்பு / தேய்பிறை துவாதசி
  • அக்டோபர் 19 – ஐப்பசி 2 – ஞாயிற்றுக்கிழமை – தேய்பிறை சுபமுகூர்த்தம் / மாத சிவராத்திரி 
  • அக்டோபர் 20 – ஐப்பசி 3 – திங்கட்கிழமை – தீபாவளி பண்டிகை / சுபமுகூர்த்த தினம்
  • அக்டோபர் 21 – ஐப்பசி 4  – செவ்வாய்கிழமை – அமாவாசை 
  • அக்டோபர் 22 – ஐப்பசி 5 – புதன்கிழமை – கந்த ஷஷ்டி விழா தொடக்கம் / வளர்பிறை பிரதமை 
  • அக்டோபர் 23 – ஐப்பசி 6 – வியாழக்கிழமை – சந்திர தரிசனம் / கரிநாள் 
  • அக்டோபர் 24 – ஐப்பசி 7 – வெள்ளிக்கிழமை – வளர்பிறை சுபமுகூர்த்தம் / வளர்பிறை திரிதியை 
  • அக்டோபர் 25 – ஐப்பசி 8 – சனிக்கிழமை – வளர்பிறை சதுர்த்தி விரதம் 
  • அக்டோபர் 26 – ஐப்பசி 9 – ஞாயிற்றுக்கிழமை – வளர்பிறை பஞ்சமி 
  • அக்டோபர் 27 – ஐப்பசி 10 – திங்கட்கிழமை –  சுபமுகூர்த்த தினம்/ கந்தசஷ்டி விழாவின் சூரசம்ஹார நிகழ்வு / ஷஷ்டி விரதம்
  • அக்டோபர் 28 – ஐப்பசி 11 – செவ்வாய்கிழமை – வாஸ்து செய்ய சிறந்த நாள் (நேரம் காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை)
  • அக்டோபர் 29 – ஐப்பசி 12 – புதன்கிழமை – வளர்பிறை அஷ்டமி / திருவோண விரதம் 
  • அக்டோபர் 30 – ஐப்பசி 13 – வியாழக்கிழமை – வளர்பிறை நவமி / பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி
  • அக்டோபர் 31 – ஐப்பசி 14  – வெள்ளிக்கிழமை – வளர்பிறை தசமி / சுபமுகூர்த்த தினம்