AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சனிப்பெயர்ச்சி 2026.. மேஷ ராசியினரே எச்சரிக்கை.. தொந்தரவுகளை அள்ளித்தரும் ஏழரை சனி..

Sani Peyarchi 2026: கோச்சாரப் பலன்கள் (தற்போதைய கிரக நிலை) ஒருபுறம் இருந்தாலும், ஒருவருடைய சொந்த ஜாதகத்தின் வலிமையைப் பொறுத்தே இறுதிப் பலன்கள் அமையும். கவலைப்படத் தேவையில்லை; முறையாகச் சிவபெருமானை வழிபடுவதன் மூலமும், உரிய பரிகாரங்களைச் செய்வதன் மூலமும் சனியின் தீமைகளைக் குறைக்கலாம்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 02 Mar 2026 13:59 PM IST
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களில் மிக மெதுவாக நகரக்கூடிய கிரகமான சனி பகவான், ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்கி பலன்களை வழங்குகிறார். அந்த வகையில், வரும் 2026 மார்ச் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியளவில், சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்கிறார். இந்த இடப்பெயர்ச்சியின் மூலம் மேஷ ராசிக்காரர்களுக்கு (அஸ்வதி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்) ஏழரைச் சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. சனி பகவான் உங்கள் ராசிக்கு 12-ஆம் இடமான விரைய ஸ்தானத்திற்கு வருகிறார்.

1 / 5
பொதுவாக இது செலவுகள் மற்றும் அலைச்சல்களைத் தரும் காலம் என்றாலும், சனி பகவான் ஆயுள் காரகன் என்பதால், அவர் மறைவு ஸ்தானத்திற்கு வருவது சில கண்டங்கள் அல்லது உடல்நலக் குறைபாடுகளைத் தரக்கூடும். கையில் இருக்கும் பணம் வீண் செலவாவதற்குப் பதில், வீடு கட்டுதல், நிலம் வாங்குதல் போன்ற சுப காரியங்களுக்காகச் செலவிட வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேரவும், மனஸ்தாபங்கள் நீங்கிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கவும் இது உகந்த காலம். தொலைந்து போன அல்லது இழந்த சொத்துக்கள் மற்றும் பொருட்கள் மீண்டும் கைக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.

2 / 5
ராசியின் குணமும் எச்சரிக்கையும்: மேஷ ராசிக்காரர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் இருப்பதால் நேர்மையாகவும், முன் கோபக்காரர்களாகவும் இருப்பார்கள். இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில், மற்றவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதைத் தவிர்ப்பது பகைமைகளைக் குறைக்க உதவும். குறிப்பாக மேஷ ராசிப் பெண்கள் தங்கள் பிடிவாத குணத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.

3 / 5
யாருக்கு அதிக லாபம்: ரியல் எஸ்டேட் மற்றும் புரோக்கரேஜ் தொழில், மருத்துவம், சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சித் துறை, உணவு சம்பந்தமான தொழில்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலை மற்றும் நீர்நிலைகள் சார்ந்த கட்டுமானப் பணியாளர்கள் துறைகளில் இருப்பவர்களுக்கு சனிப் பெயர்ச்சி அபாரமான யோகத்தைத் தரும். மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இந்த காலம் 90% நற்பலன்களைத் தரும். சுய தொழில் செய்பவர்களுக்கு 80% வரை நன்மைகள் கிடைக்கும்.

4 / 5
பரிகாரங்கள் மற்றும் ஆலோசனைகள்: சனியின் தீவிரத்தைக் குறைக்கச் சிவபெருமானை வணங்குவது மிகச்சிறந்த பரிகாரம். கோச்சாரப் பலன்கள் சாதகமாக இல்லாத பட்சத்தில், உங்களது சொந்த ஜாதகத்தைப் பார்த்து அதற்கேற்பத் தனிப்பட்ட பரிகாரங்களைச் செய்வது நல்லது. சனியின் தாக்கம் என்பது கஷ்டம் என்றால் கஷ்டம் தான், அதை அனுபவித்துத் தான் தீர வேண்டும். ஆனால் முறையான வழிபாடுகள் அந்த கஷ்டத்தைத் தாங்கும் சக்தியைத் தரும்.

5 / 5
Follow Us