AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vaikasi Amavasya: வைகாசி அமாவாசை.. இதெல்லாம் செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது!

வைகாசி அமாவாசை, ஜூன் 25, 2025 அன்று வருகிறது. இந்நாள் முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டாலும், லட்சுமி தேவியை வழிபட்டு செல்வத்தை ஈர்க்கலாம். நெய் தீபம் ஏற்றுதல், துளசி மாலைடன் காயத்ரி மந்திரம் 108 முறை உச்சரித்தல், கற்பூரம், குங்குமப்பூ, கிராம்புடன் வழிபாடு, புனித நீர்நிலைகளில் நீராடுதல் ஆகியவை செழிப்பை தரும் என நம்பப்படுகிறது.

Vaikasi Amavasya: வைகாசி அமாவாசை.. இதெல்லாம் செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது!
வைகாசி அமாவாசை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 23 Jun 2025 17:10 PM IST

இந்து மதத்தில் அமாவாசை என்பது மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. சாஸ்திரத்தைப் பொறுத்தவரை இந்நாள் முன்னோர்களுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தற்போது வைகாசி மாதம் நடந்து வருகிறது. இம்மாதத்தில் அமாவாசை திதி 2025, ஜூன் 25ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக இந்நாளில் நாம் முன்னோர்களை வழிபடும் பொருட்டு விரதம், தர்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை மேற்கொள்வோம். அதேசமயம் இந்த அமாவாசை நாளில் செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் லட்சுமி தேவியை மகிழ்விக்கும் வகையில் இறை வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என சொல்லப்படுகிறது. அதன்படி இந்நாளில் நாம் சில விஷயங்களை செய்வதன் மூலம், லட்சுமி தேவியின் ஆசியைப் பரிபூரணமாக பெறலாம் என நம்பப்படுகிறது. அவ்வாறு ஆசி கிடைக்கும்போது, வீட்டில் பணப் பற்றாக்குறை ஒருபோதும் இருக்காது எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில் வைகாசி அமாவாசை நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் காணலாம்.

இதெல்லாம் மறக்காம செய்யுங்க

அமாவாசைக்கு முதல் நாளான 2025, ஜூன் 24 ஆம் தேதி நெய் தீபம் ஒன்றை ஏற்றி, அதனை வீட்டின் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும். இதனால் லட்சுமி தேவியை மகிழ்ச்சியடைவாள் என நம்பப்படுகிறது. எரியும் விளக்கில் 7 கிராம்புகளையும் வைக்கலாம். இந்த செயலின் மூலம், உங்கள் வீட்டில் செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவும் என்று நம்பப்படுகிறது. லட்சுமி தேவி ஆசீர்வாதம் மூலம் நாம் நினைத்ததும் நடக்கும் என நம்பப்படுகிறது.

துளசி மாலை ஒன்றை அமாவாசை நாளில் வாங்கி அதனை கையில் வைத்துக் கொண்டு காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அப்படியாக 108 முறை மந்திரத்தை உச்சரித்தால் அது மன அமைதியையும் செழிப்பையும் தரும் என்று கூறப்படுகிறது. நிச்சயம் உங்களின் செயலால், லட்சுமி தேவி திருப்தி அடைவார் என கூறப்படுகிறது.

இந்த விசேஷ நாளில் கற்பூரத்துடன் குங்குமப்பூ மற்றும் கிராம்ப ஆகியவை கலந்து வழிபடுங்கள். இந்த வழிபாடு வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும் என நம்பப்படுகிறது. இதனால் லட்சுமி தேவி வாசம் வீட்டில் நிகழும். இந்த வழிபாட்டை அமாவாசை நாளில் யார் செய்தாலும், வீட்டில் செல்வம் பெருகும். அமாவாசை நாளில் அருகில் உள்ள ஏதேனும் புனிதமான நீர் நிலைகளில் நீராட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் வீட்டிலேயே மஞ்சள், வேப்பிலை உள்ளிட்ட பொருட்கள் கலந்த நீரில் குளிக்க வேண்டும்.

முடிந்தவர்கள் இந்நாளில் தர்ப்பணம் செய்யலாம். முடியாதவர்கள் குறைந்தப்பட்சம் வீட்டிலாவது வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் தானம் மறக்காமல் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் பல புண்ணிய பலன்களைப் பெறலாம் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் கூறப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us