தமிழகத்தில் குடியிருப்பு பகுதி ஒன்றில் தாய் மற்றும் மகளை வளர்ப்பு நாய் கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் நாயின் உரிமையாளர்கள் காட்டிய அலட்சியப்போக்கு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், தாயும் அவரது மகளும் குடியிருப்பின் நடைபாதையில் நடந்து செல்வதைக் காண முடிகிறது.