சாலையில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று உங்கள் முன் ஒரு யானைக் கூட்டம் வந்தால் என்ன செய்வீர்கள்? அந்த தருணம் தான் சமீபத்தில் ஒரு வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. வைரலாகும் வீடியோவில் ஒரு முழு யானைக் கூட்டம் ஒன்றாக சாலையை கடக்க ஆரம்பிக்கின்றன. அதை பார்த்த மனிதர்கள் உடனே வாகனங்களை நிறுத்தி, அந்த யானைகளுக்கு பாதுகாப்பாக வழி விட்டனர். அனைத்து யானைகளும் அமைதியாக சாலையை கடந்து சென்ற பிறகு, கடைசியாக வந்த பெரிய பெண் யானை திடீரென்று நின்று, மனிதர்களை நோக்கி திரும்புகிறது.