AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பங்குனி உத்திர விழா… பழனி முருகன் கோயிலில் 3 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து!

Palani Murugan Temple: பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 3 நாள்களுக்கு கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில், முக்கிய பிரமுகர் உள்ளிட்ட அனைவரும் ஒரே தரிசன வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பங்குனி உத்திர விழா… பழனி முருகன் கோயிலில் 3 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து!
பழனி முருகன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 27 Mar 2026 08:30 AM IST

தமிழகத்தில் ஆறுபடை வீடுகளில் 3- ஆம் படை வீடான பழனி திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுத சாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. மயில், சேவல், பாம்பு, வேல் உள்பட படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அன்று முதல் பங்குனி உத்திரம் வரை தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் ஆகியவை நடைபெறுகிறது. மேலும், ஈரோடு மாவட்டம், கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து பழனி மலை கோவிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம் ஆகும். இதனால், தினந்தோறும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். இதே போல, பங்குனி உத்திர நாளான ஏப்ரல் 1- ஆம் தேதி ( புதன்கிழமை) பங்குனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

கோயிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருகை

அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகின்றது. இதை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள். இதனால், கோயிலின் உள்ளேயும், வெளிப் பகுதியிலும் அதிக அளவு பக்தர்கள் கூட்டம் காணப்படும்.

மேலும் படிக்க: ஸ்ரீ ராம நவமி 2026.. விரத முறையும்.. வழிபாட்டு நேரமும்.. முழு விவரம்..

பழனி முருகன் கோயிலில் 3 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து

இதன் காரணமாக கோவிலுக்கு தரிசனத்திற்காக வருகை தரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் மேற்கொண்டு வெளியேறும் வகையில் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற மார்ச் 31- ஆம் தேதி முதல் ஏப்ரல் 2- ஆம் தேதி வரை 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் முக்கிய பிரமுகர்கள் என்ற முன்னுரிமை இன்றி அனைவரும் ஒரே வரிசையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குன் உத்திர விழா முன்னேற்பாட்டு பணிகள்

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை, குடிநீர் வசதி, பக்தர்கள் அமருமிடம், அன்னதானம் வழங்கும் இடம் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போல, மாவட்ட காவல் துறை சார்பில் பழனி முருகன் கோயில் பகுதிகளில் பக்தர்கள் கூட்டத்தை முறைப்படுத்துவதற்காகவும், கோவிலுக்கு வரும் வாகனங்களை வரிசைப்படுத்துவதற்காகவும் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், பங்குனி உத்திர விழா நடைபெறும் நாளில் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் படிக்க : இன்று ராம நவமி.. வீட்டில் இப்படி வழிபாடு செய்தால் ராமர் அருள் கிட்டும்!

Follow Us