AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பங்குனி உத்திரம் 2026.. விரத முறையும், வழிபாட்டு நேரங்களும்..

Panguni Uthiram 2026: இந்த நன்னாளில் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்திற்குப் பால் வாங்கிக் கொடுப்பது பாவங்களை நீக்கி, கோடீஸ்வர யோகத்தைப் பெற்றுத் தரும் என ஆன்மீக ரீதியாக நம்பப்படுகிறது. குறிப்பாகத் திருச்செந்தூர் போன்ற தலங்களில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தைக் காண்பது மகா புண்ணியமாகும்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Mar 2026 14:57 PM IST
பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் இணையும் நாள் பங்குனி உத்திரம் என அழைக்கப்படுகிறது. இது முருகப்பெருமானுக்கு உகந்த மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். புராணங்களின்படி, முருகப்பெருமான் தெய்வானையைத் திருமணம் செய்துகொண்ட நன்னாள் இதுவாகும். இதுமட்டுமின்றி, சிவன்-பார்வதி, ராமர்-சீதை, ரங்கநாதர்-ஆண்டாள் எனப் பல தெய்வீகத் திருமணங்கள் நடைபெற்ற நாளாகவும் இது போற்றப்படுகிறது. மேலும், செல்வத்தின் அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமி அவதரித்ததும் இதே பங்குனி உத்திரத்தில்தான்.

1 / 5
2026 பங்குனி உத்திரம் ஏப்ரல் 1, புதன்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. உத்திரம் நட்சத்திரம் மார்ச் 31 மாலை 3:20 மணி முதல் ஏப்ரல் 1 மாலை 4:17 மணி வரை. பௌர்ணமி திதி - ஏப்ரல் 1 காலை 7:38 மணி முதல் ஏப்ரல் 2 காலை 7:57 மணி வரை. நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.

2 / 5
விரதம் மற்றும் வழிபாட்டு முறைகள்: அன்று அதிகாலையிலேயே நீராடி, வீட்டைச் சுத்தம் செய்து, முருகப்பெருமான் படத்திற்கு மலர் மாலை சூட்டி, நெய் விளக்கேற்றி வழிபாட்டைத் தொடங்க வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் இருப்பது சிறந்தது. முடியாதவர்கள் பால், பழம் மட்டும் உட்கொண்டு விரதம் இருக்கலாம். 'ஓம் சரவண பவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தை 108 முறை அல்லது உங்களால் முடிந்தவரை உச்சரிக்க வேண்டும். கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் ஆகியவற்றைப் பாராயணம் செய்வது கூடுதல் பலன் தரும்.

3 / 5
வீட்டில் 'சரவண பவ' விளக்கு அல்லது 'ஆறுமுக விளக்கு' ஏற்றி வழிபடுவது செவ்வாய் தோஷத்தை நீக்கி, குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தரும். ஆறு வெற்றிலைகளின் காம்பைக் கிள்ளிவிட்டு, அவற்றின் மேல் அகல் விளக்கு வைத்து நெய் தீபம் ஏற்றுவது முருகனுக்கு மிகவும் பிடித்தமான வழிபாடு. இது தொடர்ச்சியாக 9 வாரங்கள் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.

4 / 5
பங்குனி உத்திர வழிபாட்டின் பலன்கள்: திருமணத் தடைகள் நீங்கி விரைவில் மண வாழ்க்கை அமையும் (இதனை 'கல்யாண விரதம்' என்றும் அழைப்பார்கள். பொருளாதாரத் தடைகள் நீங்கி செல்வம் பெருகும். நோய்கள் தீர்ந்து நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டிற்கு இது மிக உகந்த நாள் என்பதால், அன்று குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வருவது குடும்பத்திற்குப் பாதுகாப்பு தரும்.

5 / 5
Follow Us