பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘துரந்தர் 2’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குநர் ஆதித்யா தரை மிகுந்த பாராட்டுகளுடன் புகழ்ந்துள்ளார். தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கங்கனா பகிர்ந்ததாவது, “துரந்தர் வெற்றியின் மிகப் பெரிய சிறப்பு, ஆதித்யா தர் போன்ற ஒரு ‘சூப்பர் ஸ்டார் இயக்குநர்’ உருவாகியிருப்பது தான்” என்று கூறினார். மேலும், ஹாலிவுட்டில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், குவென்டின் டரண்டினோ, கிறிஸ்டோபர் நோலன் போன்ற இயக்குநர்கள் நடிகர்களை விட பெரியவர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.