இரவு நேரத்திலும் சூரிய ஒளியைப் பெற முடிந்தால் எப்படி இருக்கும்? கற்பனையாகத் தோன்றினாலும், இதனை நிஜமாக்க ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் களமிறங்கியுள்ளது. 'ரிஃப்ளெக்ட் ஆர்பிட்டல்' என்ற நிறுவனம், விண்வெளியில் ராட்சதக் கண்ணாடிகளை நிலைநிறுத்தி, பூமியில் இருள் சூழ்ந்த பகுதிகளில் சூரிய ஒளியைப் பாய்ச்சத் திட்டமிட்டுள்ளது.