AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Spiritual Events: ஆடி அமாவாசை, ஆடிப்பூரம்.. ஜூலை மாதத்தின் முக்கிய ஆன்மிக விசேஷ நாட்கள்!

2025 ஜூலை மாதம், தமிழர்களின் ஆன்மிக மாதமான ஆடி மாதத்தின் பிறப்பைக் கொண்டாடும் மாதம். ஆனி உத்திரம், ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் போன்ற முக்கியமான பண்டிகைகள் இந்த மாதத்தில் வருகின்றன. காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவும் இந்த மாதத்தில் நடைபெறுகிறது.

Spiritual Events: ஆடி அமாவாசை, ஆடிப்பூரம்.. ஜூலை மாதத்தின் முக்கிய ஆன்மிக விசேஷ நாட்கள்!
ஜூலை மாதத்தின் முக்கிய விசேஷ நாட்கள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 30 Jun 2025 10:10 AM IST

ஆங்கில மாதத்தின் 7வது மாதமாக ஜூலை வருகிறது. இந்த மாதம் வந்து விட்டாலே ஆன்மிக மாதம் என சொல்லும் அளவுக்கு ஏராளமான பண்டிகைகள் வரும். குறிப்பாக தமிழ் மாதங்களில் ஆன்மிக மாதமாக அறியப்படும் ஆடி மாதம் ஜூலையில் தான் பிறக்கும். 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஆனி உத்திர திருமஞ்சனம், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, ஆடிப்பூரம் என ஏகப்பட்ட ஆன்மிக நிகழ்வுகள் வரவுள்ளது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

ஜூலை மாதத்தின் மிக முக்கிய விசேஷ நாட்கள்

  • ஜூலை 1 – ஆனி 17 – செவ்வாய்கிழமை – ஆனி உத்திர அபிஷேகம், ஷஷ்டி விரதம்
  • ஜூலை 2 – ஆனி 18 – புதன்கிழமை – ஆனி உத்திர தரிசனம், சுபமுகூர்த்தம், தேவமாதா காட்சியருளிய நாள்
  • ஜூலை 3 – ஆனி 19 – வியாழக்கிழமை – வளர்பிறை அஷ்டமி, தாஷியா தினம்
  • ஜூலை 4 – ஆனி 20 – வெள்ளிக்கிழமை – வளர்பிறை நவமி
  • ஜூலை 5 – ஆனி 21 – சனிக்கிழமை – தசமி
  • ஜூலை 6 – ஆனி 22 – ஞாயிற்றுக்கிழமை – முஹர்ரம் பண்டிகை, சர்வ ஏகாதசி, அரசு விடுமுறை
  • ஜூலை 7 – ஆனி 23 – திங்கட்கிழமை – வளர்பிறை துவாதசி, சுபமுகூர்த்த தினம், திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா
  • ஜூலை 8 – ஆனி 24 – செவ்வாய்க்கிழமை – வளர்பிறை பிரதோஷம், நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்
  • ஜூலை 9 – ஆனி 25 – புதன்கிழமை – காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழா, வளர்பிறை சதுர்த்தசி
  • ஜூலை 10 – ஆனி 26 – வியாழக்கிழமை – முழு நிலவு நாள் (பௌர்ணமி)
  • ஜூலை 12 – ஆனி 28 – சனிக்கிழமை – திருவோண விரதம
  • ஜூலை 13 – ஆனி 29 – ஞாயிற்றுக்கிழமை – தேய்பிறை முகூர்த்த தினம்
  • ஜூலை 14 – ஆனி 30 – திங்கட்கிழமை – சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை சுப முகூர்த்த தினம்
  • ஜூலை 15 – ஆனி 31 – செவ்வாய்கிழமை – தேய்பிறை பஞ்சமி, காமராசர் பிறந்தநாள்
  • ஜூலை 16 – ஆனி 32 – புதன்கிழமை – தேய்பிறை ஷஷ்டி விரதம், தேய்பிறை சுப முகூர்த்த தினம்

ஆடி மாத முக்கிய விசேஷ தினங்கள்

  • ஜூலை 17 – ஆடி 1 – வியாழக்கிழமை – ஆடி மாதப் பிறப்பு, தேய்பிறை சப்தமி
  • ஜூலை 18 – ஆடி 2 – வெள்ளிக்கிழமை – ஆடி வெள்ளி, தமிழ்நாடு தினம், கரிநாள், தேய்பிறை அஷ்டமி
  • ஜூலை 19 – ஆடி 3 – சனிக்கிழமை – தேய்பிறை நவமி
  • ஜூலை 20 – ஆடி 4 – ஞாயிற்றுக்கிழமை – தேய்பிறை தசமி, கார்த்திகை விரதம்
  • ஜூலை 21 – ஆடி 5 – திங்கட்கிழமை – தேய்பிறை சர்வ ஏகாதசி
  • ஜூலை 22 – ஆடி 6 – செவ்வாய்கிழமை – ஆடி செவ்வாய், பிரதோஷம்
  • ஜூலை 23 – ஆடி 7 – புதன் கிழமை – மாத சிவராத்திரி
  • ஜூலை 24 – ஆடி 8 – வியாழக்கிழமை – ஆடி அமாவாசை
  • ஜூலை 25 – ஆடி 9 – வெள்ளிக்கிழமை – ஆடி வெள்ளிக்கிழமை
  • ஜூலை 26 – ஆடி 10 – சனிக்கிழமை – கரிநாள், சந்திர தரிசனம்
  • ஜூலை 27 – ஆடி 11 – ஞாயிற்றுக்கிழமை – வாஸ்து செய்ய சிறந்த நாள்
  • ஜூலை 28 – ஆடி 12 – திங்கட்கிழமை – ஆடிப்பூரம், சதுர்த்தி விரதம்
  • ஜூலை 30 – ஆடி 14 – புதன்கிழமை – வளர்பிறை ஷஷ்டி விரதம்

(ஆன்மிகம் மற்றும் பஞ்சாங்க தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நேரம், திதி, காலம் உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட நாட்களில் மாற்றம் பெறலாம். இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us