AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Hardik Pandya: சொன்ன சொல்லை தவறாத ஹர்திக் பாண்ட்யா.. மைதான ஊழியர்களுக்கு வழங்கிய பரிசுத்தொகை!

Wankhede Stadium: கிடைத்த தகவல்களின்படி, 2026 டி20 உலகக் கோப்பைக்குத் தயாராவதற்காக ஹர்திக் வான்கடே மைதானத்தில் இரவு வெகுநேரம் வரை பயிற்சி செய்துள்ளார். இதனால், மைதான ஊழியர்கள் அதிக நேரம் அங்கேயே இருக்க வேண்டியிருந்தது. மைதான ஊழியர்கள் ஹர்திக்கின் பயிற்சியில் தங்களால் இயன்றவரை உதவினர்.

Hardik Pandya: சொன்ன சொல்லை தவறாத ஹர்திக் பாண்ட்யா.. மைதான ஊழியர்களுக்கு வழங்கிய பரிசுத்தொகை!
ஹர்திக் பாண்ட்யாImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Mar 2026 17:15 PM IST

ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) இந்திய அணியில் (Indian Cricket Team) தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார். களத்தில் தனது ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் அபாயகரமான பந்துவீச்சுக்காகப் பெயர் பெற்றவர். அதேபோல், கிரிக்கெட்டில் தான் சம்பாரிக்கும் பணத்தை கொண்டு ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதிலும் பிரபலமானவர். ஹர்திக் பாண்ட்யா தனது விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் மற்றும் சொகுசு கார்கள் காரணமாக சமூக வலைதளங்களில் அடிக்கடி ட்ரெண்ட் அடிப்பார். அப்படி இருக்க இந்த முறை, ஹர்திக் பாண்ட்யா ஒரு சிறப்பு காரணத்திற்காக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, நெகிழ்ச்சிகரமான செயலை மேற்கொண்டு அனைவரது பாராட்டுதல்களை பெற்று வருகிறார்.

ALSO READ: வெளியான ஐபிஎல் 2026ன் 2ம் கட்ட அட்டவணை.. சென்னையில் எத்தனை போட்டிகள்?

ஹர்திக் பாண்ட்யா செய்தது என்ன..?

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, வான்கடே மைதானத்தின் ஊழியர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காசோலைகளை வழங்கி தனது பெருந்தன்மையை நிரூபித்துள்ளார். இந்திய அணிக்கு முழு மூச்சில் செயல்திறனை வெளிபடுத்துவதாக இருந்தாலும் சரி, அல்லது ஒருவருக்குக் கொடுத்த வாக்குறுதியாக இருந்தாலும் சரி என்றைக்கும் விட்டுகொடுப்பது கிடையாது. ஹர்திக் பாண்ட்யா எப்போதும் தன் வார்த்தையைக் காப்பாற்றுவார். மும்பையின் வான்கடே மைதானத்தில் உள்ள 11 மைதான ஊழியர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காசோலைகளை ஹர்திக் வழங்கியுள்ளார். 2026 டி20 உலகக் கோப்பைக்கு ஹர்திக் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​மைதான ஊழியர்கள் அவருக்குப் பெரிதும் உதவினர். இதற்காகவே இந்த பரிசுத்தொகை என்று கூறப்படுகிறது.

வைரலான புகைப்படம்:

கிடைத்த தகவல்களின்படி, 2026 டி20 உலகக் கோப்பைக்குத் தயாராவதற்காக ஹர்திக் வான்கடே மைதானத்தில் இரவு வெகுநேரம் வரை பயிற்சி செய்துள்ளார். இதனால், மைதான ஊழியர்கள் அதிக நேரம் அங்கேயே இருக்க வேண்டியிருந்தது. மைதான ஊழியர்கள் ஹர்திக்கின் பயிற்சியில் தங்களால் இயன்றவரை உதவினர். 2026 டி20 உலகக் கோப்பையை வென்று திரும்பி வந்ததும் அனைவருக்கும் பரிசளிப்பதாக ஹர்திக் பாண்டியா உறுதியளித்திருந்தார். தற்போது ஹர்திக் அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். அவர் அனைத்து உறுப்பினர்களுக்கும் காசோலைகளை வழங்கி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: பெரும் எதிர்பார்ப்பு! ஐபிஎல் 2026ல் அறிமுகமாக வாய்ப்புள்ள 5 வீரர்கள்..!

6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா மும்பை..?

ஐபிஎல் 2026 தொடரில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வருகின்ற 2026 மார்ச் 29ம் தேதி வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் திலக் வர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் விளையாட இருக்கிறார்கள். கடந்த 2025 சீசனில் மும்பை அணியின் செயல்பாடு ஏமாற்றமளித்தது. இந்த முறை, ஹர்திக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தங்களின் ஆறாவது கோப்பையை வெல்வதற்காக தங்களால் இயன்ற சிறந்த முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டுமே ஐபிஎல் வரலாற்றில் தலா 5 ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளன. ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் பட்டங்களை வென்றது.

Follow Us