IPL 2026: காத்திருக்கும் ரசிகர்கள்! ஐபிஎல் 2026ல் அசத்தப்போகும் 3 கேப்டன்கள் யார்?
3 Captains Who Dominate IPL 2026 season: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஐபிஎல் 2025 சீசனில் மும்பை அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் அரைசதத்துடன் தொடங்கிய ருதுராஜ், அதன்பிறகு மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக முழுமையாக விலகினார். இந்தநிலையில், ஐபிஎல் 2026 சீசனில் அதிக ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) சீசன் வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் 10 அணிகள் ஐபிஎல் சாம்பியன் பட்டத்திற்காக அடுத்த 2 மாதங்கள் கடுமையாக போட்டியிட இருக்கின்றன. உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ஐபிஎல் 2026 சீசனை காண ஆவலலுடன் காத்திருக்கின்றன. இதற்கிடையில், அனைத்து அணிகளின் 10 கேப்டன்களும் (IPL Captains) முன்னின்று வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஐபிஎல் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தங்கள் செயல்திறனால் இந்த சீசனில் ஆதிக்கம் செலுத்த இருக்கும் 3 கேப்டன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: ஒரு போட்டியில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள்.. கெத்து காட்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ருதுராஜ் கெய்க்வாட் – சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஐபிஎல் 2025 சீசனில் மும்பை அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் அரைசதத்துடன் தொடங்கிய ருதுராஜ், அதன்பிறகு மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக முழுமையாக விலகினார். இந்தநிலையில், ஐபிஎல் 2026 சீசனில் அதிக ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல்லில் ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை 71 போட்டிகளில் விளையாடி 2 சதம் 20 அரைசதம் உள்பட 2502 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல்லில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 108 நாட் அவுட்டாகும். 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தபோது, அணியில் ஒரு அங்கமாக இருந்தார். மேலும், 2021 ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரராகத் திகழ்ந்த அவர், ‘தொடரின் வளர்ந்து வரும் வீரர்’ விருதையும் வென்றார். சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் 14 போட்டிகளில் தலைமை தாங்கி 7 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளார். இது 50% வெற்றி விகிதமாகும்.




ஷ்ரேயஸ் ஐயர் – பஞ்சாப் கிங்ஸ்
ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக வழிநடத்தி ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். இதுமட்டுமின்றி, அந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தனது பேட்டிங் திறமையால் அனைவரையும் கவர்ந்தார். பைனலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோற்றிருந்தாலும், அந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் 50.33 சராசரியில் 604 ரன்களுடன் முடித்தார். ஒரு சீசனில் 600-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில், அவரது ஸ்டிரைக் ரேட் (175.07) சிறந்ததாக இருந்தது. 87 போட்டிகளில் (48 வெற்றிகள்) 55.17% வெற்றி விகிதத்துடன், ஐயர் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
ALSO READ: ஒரு ஐபிஎல் அணிக்கு இதுவரை 17 கேப்டன்கள்.. 10 அணியும் இதுவரை எத்தனை கேப்டன்களை நியமித்துள்ளது?
சுப்மன் கில் – குஜராத் டைட்டன்ஸ்
குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், ஐபிஎல் 2026 சீசனில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்பப்படுகிறது. 2022 சீசன் முதல் குஜராத் தொடங்கியதிலிருந்து அவர் எடுத்த 2,449 ஐபிஎல் ரன்கள், எந்தவொரு பேட்ஸ்மேன் எடுத்ததிலேயே அதிகபட்சமாகும். ஐபிஎல் 2023-ல் கில் 890 ரன்கள் எடுத்தார். இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ரன் குவிப்பாகும். ஐபிஎல்-ல் கேப்டனாக சுப்மன் கில் 14 வெற்றிகளையும் 13 தோல்விகளையும் பெற்றுள்ளார்.