Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Krishna Jayanthi: வளமான வாழ்வு.. கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த 4 ராசிக்கு லக்!

கிருஷ்ண ஜென்மாஷ்டமி 2025 ஆகஸ்ட் 16 ஆம் தேதி வருகிறது. இந்த ஆண்டு புதாதித்ய யோகம் உள்ளதால், கடகம், துலாம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் மிகுந்த வளம் பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம், துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு ஆகியவை இருக்கும் என நம்பப்படுகிறது.

Krishna Jayanthi: வளமான வாழ்வு.. கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த 4 ராசிக்கு லக்!
கிருஷ்ண ஜெயந்தி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 13 Aug 2025 13:49 PM

வாழ்க்கையில் பெரும்பாலான மக்களுக்கு ஜோதிடத்தின் மீது அபரிமிதமான நம்பிக்கை இருக்கும். வருடம் 365 நாட்களும் கணிக்கப்படக்கூடிய ஜோதிடப்பலன்கள் யாவும் நவக்கிரகங்களை அடிப்படையாக கொண்டது. இந்த நவக்கிரகங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 14 திதிகள் என அனைத்தும் ஒவ்வொரு மாற்றத்தை உண்டாக்ககூடிய அளவில் செயல்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் விஷேச நாட்களில் ஜோதிடப்பலன்கள் என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறும் ஒன்றாக உள்ளது. அந்த வகையில் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 16 சனிக்கிழமை வருகிறது, கிருஷ்ண பகவான் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் பிறந்தார். ஆனால் நடப்பாண்டு அந்த திதியானது ஆடி மாத கடைசி நாளில் வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த நாளில் புதாதித்ய யோகம் இருப்பதால், நான்கு ராசிக்காரர்களும் நிச்சயமாக வளம் பெறுவார்கள் என கணிக்கப்படுட்ள்ளது. கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் பல நன்மைகளை பகவான் கிருஷ்ணனின் அருளால் பெற்று மகிழ்வார்கள் என கூறப்படுகிறது. அத்தகைய ராசிகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

Also Read: Astrology: குரு, புதனின் சேர்க்கை.. 6 ராசிக்கு இந்த விஷயம் சிறப்பா இருக்கும்!

மாற்றம் பெறும் ராசிகள்

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி நாள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என நம்பப்படுகிறது. இது ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.ஜென்மாஷ்டமி மற்றும் புதாதித்ய யோகம் வியாபாரத்தில் முன்னேற்றத்தையும் திடீர் நிதி ஆதாயத்தையும் தருகிறது. ஆரோக்கியமான உடல் நலன், வியாபாரத்தில் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி ஆகியவை இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும் கணவன், மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும், திருமண தடை நீங்கும் எனவும் கூறப்படுகிறது.

துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணம் கிடைக்கும். வீட்டிலும் வெளியிலும் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நீண்ட காலமாக கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு பிரச்சனைகள் தீரும். அதுமட்டுமின்றி, பல வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும் என்பதால், அவர்களின் கைகளில் நிறைய பணம் புழங்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் கோகுலாஷ்டமி நாளில் அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் மீது கிருஷ்ணர் ஆசிகளைப் பொழிவார் என சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் தங்கள் கையில் எடுக்கும் எந்த வேலையிலும் வெற்றி பெற்று செல்வத்தைப் பெருக்குவார்கள்.முதலீடுகளில் லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கும் வேலை கிடைக்கும். நினைத்தது நடக்கும்.

Also Read: Astrology: மீன ராசியில் வக்ர நிலையில் சனி.. இந்த 6 ராசியில் மாற்றம்!

கும்பம்: இந்த ராசிக்காரர்கள் கிருஷ்ணரின் ஆசியால் தங்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள்.  விரும்பும் வேலையைப் பெறுவதற்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்.   புதிய வேலையைத் தொடங்கும் காலமாக அமையும். பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். தொழிலில் பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த கிருஷ்ண ஜெயந்தி உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

(ஜோதிட சாஸ்திர நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)