Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திங்கட்கிழமை இந்த பொருட்களை வாங்காதீங்க.. பிரச்னை உண்டாகலாம்!

இந்து சாஸ்திரத்தில் திங்கட்கிழமை சிவபெருமானுக்குரிய நாளாக பார்க்கப்படுகிறது. சாஸ்திரப்படி, இந்த நாளில் சில பொருட்களை வாங்குவது அசுபம் எனக் கருதப்படுகிறது. தானியங்கள், கலைப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், துடைப்பம், இரும்புப் பொருட்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது.

திங்கட்கிழமை இந்த பொருட்களை வாங்காதீங்க.. பிரச்னை உண்டாகலாம்!
திங்கட்கிழமை வழிபாடு
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 11 Aug 2025 13:20 PM

இந்து மதத்தில் எண்ணற்ற தெய்வங்களும், அவற்றின் அவதாரங்களும் கடவுளாக மக்களால் வழிபடப்படுகிறது. இத்தகைய சூழலில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு கடவுள் அல்லது ஒரு கிரகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட நாளில் வழிபட வேண்டிய கடவுள், சொல்ல வேண்டிய மந்திரம், செய்ய வேண்டிய பரிகாரம் என ஒவ்வொரு நாளும் பின்பற்ற வேண்டிய சில விதிகளும் வகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தான் வாரத்தின் இரண்டாம் நாளாக அறியப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் சில பொருட்களை வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படியாக திங்கட்கிழமை எந்தெந்த பொருட்களை வாங்கக்கூடாது என்பதுப் பற்றிப் பார்க்கலாம்.

சிவபெருமான் வழிபாடு பலன்கள்

திங்கட்கிழமை சிவபெருமான் வழிபாடு சோமாவார விரதம் என அழைக்கப்படுகிறது. இந்நாளில் சிவனை வழிபட்டால் நாம் வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது. அதேபோல் வாழ்வில் நிம்மதி, துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும், செல்வ வளம் உயரும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் வாழ்க்கையில் எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: சிவன், பெருமாள் இணைந்த உருவம்.. சங்கரநாராயணர் கோயில் சிறப்புகள்!

திங்கட்கிழமை வாங்கக்கூடாத பொருட்கள்

தானியங்கள்: சாஸ்திர நம்பிக்கைகளின்படி, திங்கட்கிழமை அரிசி, கோதுமை அல்லது சோள தானியங்களை வாங்கக்கூடாது. அதன்படி திங்கட்கிழமை இதுபோன்ற தானியங்களை வாங்குவது வீட்டிற்குள் எதிர்மறை சக்தியைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. அதேபோல் யாருக்கும் தானியங்களை கடன் கொடுக்கவும் கூடாது.

கலை பொருட்கள்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, வண்ணப்பூச்சுகள், தூரிகைகள், இசைக்கருவிகள் போன்ற கலை தொடர்பான பொருட்களை திங்கட்கிழமை நாளில் வாங்கக்கூடாது. அதேசமயம் நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில்கள் போன்ற படிப்பு தொடர்பான பொருட்களை திங்கட்கிழமை நாளில் வாங்கக்கூடாது.

விளையாட்டு பொருட்கள்: திங்கட்கிழமை விளையாட்டு தொடர்பான பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். திங்கட்கிழமை விளையாட்டு தொடர்பான பொருட்களை வாங்குவது எதிர்மறை சக்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது

இதையும் படிங்க: வீட்டில் ஸ்படிக சிவலிங்கம் வழிபாடு.. இந்த விஷயங்களை கவனிக்கனும்!

மின்னணு பொருட்கள்: ஜோதிடத்தின் படி, திங்கட்கிழமை மின்னணு பொருட்களை வாங்குவதும் அசுபமாகக் கருதப்படுகிறது. திங்கட்கிழமை செல்போன், லேப்டாப், டிவி போன்ற மின்னணு பொருட்களை வாங்குவது சிவபெருமானை கோபப்படுத்தும் என்று ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

துடைப்பம்: வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை துடைப்பம் வாங்கக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, திங்கட்கிழமை துடைப்பம் வாங்குவது வீட்டில் நிதி இழப்பு மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது

இரும்பு: திங்கட்கிழமை இரும்பு வாங்குவது நல்லதாக கருதப்படுவதில்லை. திங்கட்கிழமை சந்திரனுக்குரிய நாள். இரும்பு சனி கிரகத்துடன் தொடர்புடையது. சந்திரனுக்கும் சனிக்கும் இடையே விரோதமான உறவு ஏற்படும். எனவே திங்கட்கிழமை தவறுதலாக கூட இரும்பு அல்லது இரும்பு பொருட்களை வாங்க வேண்டாம் என கூறப்படுகிறது.

(ஆன்மிக நம்பிக்கைகளின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)